நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய் சொல்லும்

நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய் சொல்லும்.

How long do You keep us in doubt? If You are the Christ, tell us plainly. (John10:24)

Mt11:3; Mt26:63; Mk14:61; Lk3:15,16; Lk22:67-70; Jn1:19; Jn8:25; Jn9:22; Act18:5; 2Co3:12.

அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். (யோவான் 10:24)

மத்தேயு 11:3; மத்தேயு 26:63; மாற்கு 14:61; லூக்கா 3:15,16; லூக்கா 22:67-70; யோவான் 1:19; யோவான் 8:25; யோவான் 9:22; அப்போஸ்தலர் 18:5; 2கொரிந்தியர் 3:12.

இயேசுவே கிறிஸ்து:
ஆதி திருச்சபையில் இயேசுவே ஆண்டவர், இயேசுவே கிறிஸ்து, இயேசுவே மெய்யான தெய்வம் என்று அறிக்கை செய்தல் மிகவும் வலிமையானதாகக் காணப்பட்டது. அதைபோன்றே இயேசுவை சந்தேகிக்கும் கூட்டத்தின் அறிக்கைகளும் காணப்பட்டது. ஆதிசபை துவங்கி இக்காலம் வரையிலுள்ள சபைகளிலும் இவ்விதமான இருவித சிந்தனை பரந்துக் காணப்படுகிறது.

இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவின் தோற்றம், வளர்ச்சி, திருப்பணிகள், வார்த்தைகள், கிரியைகள் குறித்து கலங்கிய, தெளிவற்ற, ஏற்றுக்கொள்ள மறுக்கிற தயங்குகிற கூட்டத்தின் சந்தேகம் வெளிப்படுகின்றது. இயேசுவே கிறிஸ்து என்று மக்கள் உரைக்கின்றனர். அதைபோலவே இயேசுவாகிய நீர்தான் கிறிஸ்துவோ என்று கேள்வியும் கேட்டனர். இயேசுவின் பதிலை பெற்றாலும் இவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள். ஏனெனில் இவர்களுக்குள் சந்தேகம் என்ற சர்ப்பம் குடியமர்ந்து விட்டது.
இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்காதவன் சந்தேகபேர்வழி அல்ல சத்துருவின் கூட்டாளியாகிய எதிராளி. இயேசுவைக் கிறிஸ்து என்று கூறுகிறார்களே, நம்ப முடியவில்லையே, எப்படி ஏற்றுக்கொள்வது, இது உண்மையில்லையென்றால் நம் வாழ்வு முன்னும் கெட்டு, பின்னும் கெட்டுபோய் விடுமோ என்று சந்தேகம் கொள்கிறவர்கள் எதிராளிகளல்ல, துரோகிகள். இவர்களே இயேசுவை சிலுவையில் அறிகின்றவர்கள். விசுவாசிக்காம பிரசங்கிக்கிறவர்களும் உண்டு, சந்தேகத்தோடு பிரசங்கிக்கிறவர்களும் உண்டு, பாவத்துலே வாழ்ந்து பிரசங்கிக்கிறவர்களும் உண்டு. கர்த்தராகிய இயேசுவைக் கிறிஸ்து என்றும், ஆண்டவர் என்றும், மெய்யான தெய்வம் இவர் ஒருவரே என்றும் நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். இல்லையெனில் சிட்சிக்கப்படுவாய்.

எது உனக்கு பிரியமானது? தெரிந்தெடு… முன்னிட்டு செல்..
கர்த்தாவே உம் மகனை நாங்கள் விசுவாசித்து அவரை பின்பற்றி உமது இராஜ்ஜியத்தில் வந்து சேர எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME