தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்.
Do not judge according to appearance,but judge with righteous judgment. (John 7:24)
Jn8:15; Act7:19; 1Co4:3; 2Co10:7; Jas2:1,4,9; Deu1:16,17; Deu16:18,19; Ps58:1,2; Ps82:2; Ps94:20,21; Pr24:23; Pr31:9; Isa5:23; Isa11:1-9.
தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார். (யோவான் 7:24)
யோவான் 8:15; அப்போஸ்தலர் 7:19; 1கொரிந்தியர் 4:3; 2கொரிந்தியர் 10:7; யாக்கோபு 2:1,4,9; உபாகமம் 1:16,17; உபாகமம் 16:18,19; சங்கீதம் 58:1,2; சங்கீதம் 82:2; சங்கீதம் 94:20,21; நீதிமொழிகள் 24:23; நீதிமொழிகள் 31:9; ஏசாயா 5:23; ஏசாயா 11:1-9.
தீர்ப்பு செய்தல்.:
இயேசுகிறிஸ்து தேவகுமாரனாகவும், மனுஷகுமாரனாகவும் வந்திருந்தும் அவர்மேல் அபாண்டமான குற்றசாட்டுகளை சுமத்தி அவரை கொலைசெய்ய முனைந்து அதில் வெற்றியும் பெற்றனர் யூதர்கள். அவர்களின் தீர்ப்பு குறித்து முன்னதாகவே கடிந்துரைக்கின்றார்.
- கசப்பு, வெறுப்பு, பொறாமை, குரோதம் போன்றவைகளை மனதில் வைத்துகொண்டு தீர்ப்பிடுவதும் தீர்ப்பல்ல.
- ஒருவரின் தோற்றத்தை வைத்து தீர்ப்பிடுவதும் தீர்ப்பல்ல.
- பரிதானம் வாங்கிகொண்டு தீர்ப்பிடுவதும் தீர்ப்பல்ல.
- திறமையான வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பிடுவதும் தீர்ப்பல்ல. – உள்ளத்தில் முன்னதாகவே ஒன்றைவைத்துகொண்டு தீர்ப்பிடுவதும் தீர்ப்பல்ல.
- ஆவியானவரின் வழிகாட்டுதல்படி தீர்ப்பிடுவதே தீர்ப்பு.
- நன்றாய் விசாரித்து அறிந்து தனக்குதானே நிதானித்து தீர்ப்பிடுவதே தீர்ப்பு.
நியாயசங்கத்தில் தீர்ப்பிடுவது உண்டு. கிறிஸ்தவ சபைகளிலும் நியாயசங்கம் உண்டு.
துர் உபதேசங்கள், அந்நிய நுகத்தில் பிணைக்கபடுதல் போன்றவைகளின் அடிப்படையில் சபைதலைவர் தீர்ப்பிடுவது நியாயமானதாகவே கருதப்படுகிறது.
என்றாலும் இறுதியான தீர்ப்பு தேவனுடைய கரங்களில் உள்ளது. ஒருவரையும் குற்றபடுத்தாமல் வாழ்வதே அமரிக்கையான வாழ்வு.
கண்ணால் கண்டதும் பொய்.
காதால் கேட்டதும் பொய். ஆராய்ந்தறிவதே மெய் என்று ஒருவர் கூறக்கேட்டிருக்கின்றேன்.
பிறரை தீர்ப்பிடுமுன்
உன்னை தீர்ப்பிட்டுப்பார்
உண்மை வெளிச்சமாகும்.
கர்த்தாவே உமது நியாயதீர்ப்புகள் உண்மையானவைகள். உம் மகனை நியாயதீர்ப்புக்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே அனுப்பினீர். ஆனால், அவரைகொண்டு முழு உலகையும் தீர்ப்பிடப்போகிறீர் என்று அறிந்து பயபக்தியுடன் நடக்க உதவிடும்.