நீ பிசாசு பிடித்தவன் என்று இயேசுவை குற்றப்படுத்தினர்.
People answered and said, “You have a demon. Who is seeking to kill You? (John 7:20)
Jn8:48,52; John 10:20; Mt10:25; Mt11:18,19; Mt12:24; Mk3:21,22,30; Lk11:15; Act26:24.
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன், உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். (யோவான் 7:20)
யோவான் 8:48,52; யோவான் 10:20; மத்தேயு 10:25; மத்தேயு 11:18,19; மத்தேயு 12:24; மாற்கு 3:21,22,30; லூக்கா 11:15; அப்போஸ்தலர் 26:24.
இயேசு யார்?
நீ பைத்தியகாரன் பேசுவதுபோல பேசுகிறாய்.
நீ உன்னுடைய பேச்சை புரிந்துகொள்ளமுடியாதபடி பேசுகிறாயே.
நீ உன்னை கடவுளுக்கு சமமாக பேசுகிறாயே.
நீ மரிக்கபோகிறேன் என்கிறாயே.
நீ திரும்பி வருவேன் என்கிறாயே.
நீ உன்னை தேவகுமாரன் மற்றும் மனுஷகுமாரன் என்கிறாயே.
இவ்விதம் இயேசுவை குறித்து யூதர்கள் பலவிதமான தப்பபிப்பிராயம் கொண்டிருந்ததினால் பிசாசுபிடித்தவன் என்று கூறியிருக்கலாம்.
பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வந்த நியாயபிரமான விதிமுறைகளுக்கு உண்மை விளக்கம் கொடுத்ததினால் இவ்விதமாய் கூறியிருக்கலாம்.
தேவனுடைய ஆவியை பெற்றவரை பிசாசு பிடித்தவன் என்றும், உலகத்தின் ஆவியை – ஞானத்தை உடையவரை தேவனுக்கேற்றவன் என்று தீர்மானிக்கிற கிறிஸ்தவத்தின் மத்தியில்
இயேசுவைபோல வாழ்ந்து, இயேசுவுக்காய் வாழ்ந்து,
இயேசுவையே அறிவித்து,
இயேசுவிலே மரிக்க
துணியும் திருச்சபை பிதாக்கள் எழும்புவார்களோ?.
நிச்சயம் எழும்புவர்.
தேவனுடைய ஆவியை பெறாத எவரும் தேவனுடைய மந்தையை மேய்க்க தகுதியற்றவர்கள்.
அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்.
கர்த்தாவே உம் குமாரனின் மீது வசைமொழிகள் சாற்றி சிலுவைக்கு கொண்டுசென்ற கூட்டத்தை போலவே இக்காலத்திலும் காணப்படுகிற கூட்டத்தின் மத்தியில் உம் குமாரனைபோல வாழ உதவிடும்.