புசித்து, பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. கடைசிநாளில் எழுப்புவேன்
Whoever eats My flesh and drinks My blood has eternal life,I will raise him up at last day. (John 6:54)
Jn6:27,40; Jn11:26; Jn17:2; Ro8:10; 1Co15:45; Gal2:20; Phil3:7-10; 1Tim1:16; 1Jn2:25; 1Jn 3:24.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (யோவான் 6:54)
யோவான் 6:27,40; யோவான் 11:26; யோவான் 17:2; ரோமர் 8:10; 1கொரிந்தியர் 15:45; கலாாத்தியர் 2:20; பிலிிப்பியர் 3:7-10; 1தீமோத்தேயு 1:16; 1யோவாான் 2:25; 1யோவான் 3:24.
கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம்.
ஐக்கியமாயிருக்க அழைத்த தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.1கொரி1:9.
எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்று 1யோவா1;3 கூறுகின்றது.
கிறிஸ்தவ ஐக்கியத்தில் 3 விதமான ஐக்கியம் உண்டு.
சிலுவையை மையபடுத்தி வெளிபட்டுள்ள மூன்று ஐக்கியமானது:… – மேல்நோக்கு ஐக்கியம். கிறிஸ்துவோடுல்ள ஐக்கியம்.
- பக்கவாட்டு ஐக்கியம். பிறரோடுள்ள, சக கிறிஸ்தவரோடுள்ள ஐக்கியம்.
- கீழ்நோக்கு ஐக்கியம். கீழ்நிலையிலுள்ளோரோடுள்ள ஐக்கியம்.
இங்கே நாம் முதல் விஜயத்தை தியானிக்கின்றோம்.
கிறிஸ்துவோடுள்ள ஐக்கியமானது கிறிஸ்துவின் சரீரம், இரத்தத்தோடு இணைந்த ஒன்றாகும்.
இந்த ஐக்கியம் உண்டாயிருந்தால்தான் உயிர்ப்பின் ஆவியின் கிரியையை அடைய இயலும்.
கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் மூன்று விதங்களிலானது…
- பிதாவோடுள்ள ஐக்கியம். எல்லா விஜயங்களிலும் பிதா மகிமைபடுத்தபட வேண்டும். அவரை விசுவாசிக்க வேண்டும். அவர் கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும்.
- குமாரனோடுள்ள ஐக்கியம். பிதாவிடம் நெருங்குவதற்கு எல்லாவற்றிலும் கிறிஸ்துவையே மையபடுத்த வேண்டும். கிறிஸ்து இல்லாமல் எதையும் செய்வதை பிதாவானவர் அங்கீகரிக்க மாட்டார். கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் சபையில் நிலைத்திருத்தலை குறிக்கும். – பரிசுத்த ஆவியோடுள்ள ஐக்கியம். பரிசுத்த ஆவியின் நடத்துதல் இல்லாமல் குமாரன் வழியாக பிதாவிடம் செல்ல இயலாது. பிதாவுக்கும், குமாரனுக்கும் நேராக நம்மை இயக்குபவர் ஆவியானவரே.
அன்பானவர்களே!..
நமது ஐக்கியம் எங்கே, யாரோடு இணைந்து காணப்படுகிறது.
கர்த்தாவே, உமது மகனோடு நாங்கள் இணைந்து உம்மிடம் வர எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளீர். நீர் எங்களுக்கு தந்துள்ள ஆவியரை கொண்டு நாங்கள் இந்த ஐக்கியத்தில் நிலைத்து நிற்க உதவிடும்.