இயேசு நானே ஆடுகளுக்கு வாசல் என்றார்.
Jesus said to them again, I am the door of the sheep. (John 10:7)
Jn10:1,9; Jn14:6; Eph2:18; Heb10:19-22; Ps79:13; Ps95:7; Ps100:3; Isa53:6; Eze34:31; Lk15:4-6; Lk13:24; Isa62:10; Jer6:16
ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 10:7)
யோவான் 10:1,9; யோவான் 14:6; எபேசியர் 2:18; எபிரெயர் 10:19-22; சங்கீதம் 79:13; சங்கீதம் 95:7; சங்கீதம் 100:3; ஏசாயா 53:6; எசேக்கியேல் 34:31; லூக்கா 15:4-6; லூக்கா 13:24; ஏசாயா 62:10; எரேமியா 6:16.
இயேசுவே வாசல்:
விவிலியத்தில் பலவிதமான வாசல்கள் காட்டப்பட்டுள்ளன. இடுக்கமான வாசலும் உண்டு, விசாலமான வாசலும் உண்டு. மோட்ச வாசலும் உண்டு, நரக வாசலும் உண்டு. பாதாள வாசலும் உண்டு. மரண வாசலும் உண்டு, ஜீவ வாசலும் உண்டு. இங்கு இயேசுவே வாசல் என்று தன்னை அடையாளப்படுத்துகிறார்.
இயேசுகிறிஸ்து தன்னை ஆடுகளுக்கு வாசல் என்கிறார். தொழுவத்துக்கு உட்பட்ட ஆடுகளுக்குதான் அவர் வாசல். தொழுவத்துக்குள் பிரவேசிக்க விரும்பும் ஆடுகளுக்கும் அவர் வாசல். எவர் எப்படிபட்டவராயிருந்தாலும் ஜீவனுக்குட் பிரவேசிக்கவும், தொழுவத்துக்குட்படவும் விரும்பினால் மட்டுமே இந்த வாசல் வழியாய் பிரவேசிக்க முடியும்.
இந்த வாசல் வழியாய் பிரவேசித்தால் உண்டாகும் நன்மை குறித்து 9 ஆம் வசனத்தில் தரப்பட்டுள்ளது. ஆம் இயேசு என்ற வாசல் வழியாய் பிரவேசிக்க வேண்டும்.
உனக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்,
உனக்கு நன்மை உண்டாயிருக்கவும்,
அவரோடு ஐக்கியம் கொள்வதற்கும்,
தேவனை தரிசிப்பதற்கும்,
பரிசுத்தவான்களோடு ஐக்கியமாயிருப்பதற்கும்,
மோட்சம் செல்லுவதற்கும்,
பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும்,
இரட்சிப்பு உண்டாகவும்,
தேவபுத்திரர் என்ற பாக்கியம் பெறவும்,
இனிவரும் அழிவிலிருந்து தப்பவும்,
நரகாக்கினைக்கு தப்பவும்,
யோக்கியதையாய், நீதிமானாய் வாழ்வதற்கும்,
ஆசீர்வாதமாய், செழிப்பாய் வாழ்வதற்கும்.
இந்த வாசல் வழியாய் பிரவேசியுங்கள். வேறு வாசலை தேடி ஓடாதேயுங்கள். தேவனால் அங்கீகரிக்கப்பட்ட வாசல் இதுவே. மீந்தவை பொய்யின் வாசல்கள்.
இந்த வாசல் உனக்காய் திறக்கப்பட்டுள்ளது. இயேசு தம் ஜீவனை கொடுத்து இந்த வாசலை திறந்துள்ளார். இந்த வாசல் அடைபடும் நேரம் நெருங்கிவிட்டது.
உள்ளே பிரவேசிக்க யோசிக்காதே, தரித்திராதே, பொறுத்திராதே, பிறருக்காய் காத்திராதே. விரைந்து செல். உள்ளே பிரவேசித்துபார். அதன் மகிமையை நீ காண்பாய்.
இந்த வாசலை அவர் மட்டுமே பூட்ட முடியும். எவராலும் பூட்டமுடியாத வாசல் இயேசு.
இயேசுவே வாசல்.
ஆடுகளுக்கான வாசல்.
ஓநாய்களுக்கான வாசல் அல்ல. மறவாதீர்.
வாசலில் பிரவேசிப்போம்.. வானதேவனை ஆராதிப்போம்.
கர்த்தாவே உமது மகனை எங்களுக்கான மீட்பின் வாசலாகவும், திறப்பின் வாசலாகவும் தந்ததற்காக நன்றி. இவ்வாசலில் அநகரை அழைத்து செல்ல எங்களை உம் ஆவியால் நிரப்பி பலபடுத்தும்.