ஜீவனை

நன்மை செய்கிறவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருப்பார்கள்.

those who have done good, to the resurrection of life. (John 5:29a)
Mt25:31-40; Lk14:14; Act24:15; Ro2:8,9; Ro8:11; 1Co6:14; Gal6:8b,9,10; 1Ti6:17-19; Heb13:16; 1Pet3:10,11,12a; 1pet4:5; rev20:12.

அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:29)

மத்தேயு 25:31-40; லூக்கா 14:14; அப்போஸ்தலர் 24:15; ரோமர் 2:8,9; ரோமர் 8:11; 1கொரிந்தியர் 6:14; கலாத்தியர் 6:8b,9,10; 1தீமோத்தேயு 6:17-19; எபிரெயர் 13:16; 1 பேதுரு 3:10,11,12a; 1பேதுரு 4:5; வெளி 20:12.

நன்மை செய்தவர்கள்:

விவிலியத்தில் இரு சொற்கள் கிறிஸ்தவ வாழ்வியலில் மிகவும் முக்கியமானவைகள்.
விசுவாசமும், நற்கிரியைகளுமாகும். விசுவாசத்தை பவுலும், நற்கிரியைகளை யாக்கோபும் த்ங்கள் வாசகரிடத்தில் குறைவாயிருந்தவைகளை ஒழுங்குப்படுத்த மிகைப்படுத்தி எழுதினார்கள்.
கிறிஸ்தவ விசுவாசத்தில் வளருகிறவர்கள் நற்கிரியைகளில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் நம் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து.

விசுவாசம் நற்கிரியைகளுக்கு தூண்டுதல் கொடுப்பதும், நற்கிரியைகள் விசுவாசத்துக்கு தூண்டுதல் கொடுப்பதும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் செய்யும் கிரியையாகும். இந்த இரண்டில் ஒன்று குறைந்தாலும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள நற்கதியை நாம் அடைய முடியாது.

சமீபகாலமாக ஒருசாராரிடத்தில் விசுவாச குறைவும், இன்னொரு சாராரிடத்தில் நற்கிரியைகளில் பின்தங்கிப்போன நிலையும் காணப்படுவது அவலமாகும்.

விசுவாசத்தில் நிலைத்திருந்து நன்மை செய்கிறவர்கள் குறித்த விஷயங்களை இங்கே நாம் பார்க்க இருக்கின்றோம்.

1. பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்தல். மத்தேயு 5:44; லூக்கா 6:27,35.

2. இயேசு நன்மை செய்கிறவராய் இருந்தார். அப்போஸ்தலர் 10:38; அப்போஸ்தலர் 14:17.

3. நன்மை செய்கிறவர் எவராயினும் பிரதிபலன் பெறுவர். ரோமர் 23:10.

4. மேலான் அதிகாரத்துக்கு பயப்படாமல் இருக்க நன்மை செய். ரோமர் 13:3.

5. சோர்ந்து போகாமல் நன்மை செய். கலாத்தியர் 6;9,10; 1 தெசலோனிக்கேயர் 5:15; 2தெசலோனிக்கேயர் 3:13; 1தீமோத்தேயு 6:18.

6. பிள்ளைகள் பெற்றோரிடம் நன்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். 1தீமோத்தேயு 5:4; எபிரெயர் 13:16.

7. ஊழியக்காரர்கள் நல்ல செயல்களை செய்ய விசுவாசிகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். தீத்து 3:8.

8. நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாமல் இருப்பது பாவம். யாக்கோபு 4:17

9. நன்மை செய்து பாடனுபவிப்பது தேவனுக்கு பிரியமானது. 1பேதுரு2:20; 1 பேதுரு 3:17.

10. நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான். 3 யோவான் 1:11.

11. பலன் எதிர்பாராது நன்மை செய்தல். லூக்கா 6:35.

12. நற்கிரியைகள் செய்த 3 பெண்களின் கூட்டம். மாற்கு 14:6; 1தீமோத்தேயு 2:10; 1தீமோத்தேயு 5:10.

கர்த்தாவே, நாங்கள் உம் குமாரனில் நிலைத்திருந்து நற்கிரியைகளை செய்ய உமது ஆவியை எங்களில் இருக்க செய்துள்ளமைக்காய் ஸ்தோத்திரம். துர்கிரியைகளினால் நிரம்பியுள்ள ஜனங்களிடையில் பாடுகள் வரினும் தொடர்ந்து நற்கிரியைகள் செய்து உமது நாமத்தை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME