காலையிலே அவர் தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடம் வந்தார்கள்.
Now early in the morning He came again into the temple, and all the people came to Him. (John 8 :2)
Jn4:34; Jn7:14; Mt12:5,6; Mt21:12-16; Mt24:1; Lk2:46; Lk18:10-14; Acts2:46; Acts3:1; Acts21:26,27; Acts25:8; 1Cor9:13.
மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். (யோவான் 8:2)
யோவான் 4:34; யோவான் 7:14; மத்தேயு மத்தேயு 12:5,6; மத்தேயு 21:12-16; மத்தேயு 24:1; லூக்கா 2:46; லூக்கா 18:10-14; அப்போஸ்தலர் 2:46; அப்போஸ்தலர் 3:1; அப்போஸ்தலர் 21:26,27; அப்போஸ்தலர் 25:8; 1கொரிந்தியர் 9:13.
காலையில் ஆலயம் செல்லுதல்:
இயேசுகிறிஸ்து காலையிலே தேவனுடைய சந்நிதியில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கர்த்தரை கண்டடையதக்க சமயத்தில் அவரை தேடவேண்டும்.
இயேசுகிறிஸ்து பிதாவின் முகத்தை காலைதோறும் தரிசிக்காமல் தம் திருப்பணிகளை செய்ததில்லை. விசுவாசபாதையில் வந்திருப்போர் யாவரும் காலைதோறும் தேவனை சந்திக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மட்டுமே தேவனால் அவர்கள் சந்திக்கப்படுவர்.
தேவன் மனிதனை சந்திப்பதின் முதல் விளைவு மாற்றம் உண்டாவதாகும். தேவனால் உண்டாகிற மாற்றம் ஏற்பட வேண்டுமானால் விசுவாசிகள் தேவனை காலைபொழுதில் சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். ஊழியகாரர்கள் காலைதோறும் தேவனுடைய கிருபையையும், ஆலோசனையையும், பெலத்தையும், வழிகாட்டுதலையும் பெறாமல் கர்த்தரின் பணியை செய்யலாகாது.
காலையிலே ஆயத்தமாகி தேவ சந்நிதியில் நிற்கும் பழக்கம் மட்டுமே சகரியா தேவனால் சந்திக்கபட்டதை போன்றதொரு அனுபவத்தை அடையமுடியும்.
ஊழியன் தேவனை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும் தேவனால் சந்திக்கப்படுவது மிகவும் அவசியம்.
காலையில் ஆலயம் செல்லுவோர், கர்த்தரை தேடுவோர் சுபாவத்திலும், குணங்களிலும், பேச்சுகளிலும் முழுமையான மனந்திரும்புதலை பெற்றிருக்க வேண்டும்.
அல்லாத காலைஜெபம் சாபத்துக்கே வழிவகுக்கும்.
இயேசுவை பின்பற்றுவதுதான் நமது வேலை.
அவர் வார்த்தைகளின்படி நடப்பதுதான் அவர் எதிர்பார்ப்பது ஆகும்.
புத்தியில் மாற்றமில்லாத நிலை சத்தியத்துக்கு எதிரானது.
கிருபை பலிதமாக – கிறிஸ்துவின் தெய்வீக சுபாவம் பரிணமிக்க – கிறிஸ்துவின் தேவ சாயல் பிரதிபிம்பிக்க காலையில் ஆண்டவரை முழு இருதயத்தோடு சந்தி.
கர்த்தாவே. காலையில் உம் சமூகம் வர கற்றுகொள்ளும்படியாகவே உம் குமாரனின் அனுபவங்களை தந்தீர். நாங்கள் அதை பின்பற்ற எங்களுக்கு உதவிடும்.