தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்கிறது

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்கிறது.

Is it not written in your law,I said,You are gods.If He called them gods, to whom the word of God came. (John 10:34,35)

Ex7:1; Ex12:12; Ex22:28; 1Sam28:13; 2Ki23:16; Ps56:4; Ps82:1,6,7; Ps138:1,2.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? (யோவான் 10:34)

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
(யோவான் 10:35)

யாத்திராகமம் 7:1; யாத்திராகமம் 12:12; யாத்திராகமம் 22:28; 1சாமுவேல் 28:13; 2இராஜாக்கள் 23:16; சங்கீதம் 56:4; சங்கீதம் 82:1,6,7; சங்கீதம் 138:1,2.

தேவர்கள்:
சாதி அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உள்ளார்கள். ஆனால் விவிலிய அடிப்படையில் தேவ ஆவியை பெற்றுக்கொண்டவர்களும், தேவ வார்த்தைகளை பெற்றுக்கொண்டவர்களும் தேவர்கள் எனப்படுகிறார்கள். தேவனுடைய ஆவியினாலேயன்றி தேவ மகனாகிய கிறிஸ்துவையும், தேவனுடைய வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் இயலாது.

உலகத்து மனிதர்களிடையில் உலகத்து ஆவி உள்ளது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களிடையில் பிசாசின் ஆவி உள்ளது. ஆனால் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களில் தேவன் தமது ஆவியை அனுப்பியுள்ளார். அதனால் அவர்கள் தேவர்கள் எனப்படுகிறார்கள்.

தேவ ஆவியை பெற்றவர்கள் உலகத்துக்கும், மாம்சத்துக்கும், பிசாசுக்கும் உரியவர்களல்ல. அவர்கள் தேவனுக்குரியவர்கள், விண்ணுக்குரியவர்கள். அவர்களில் தேவ ஆவி வாசமாயிருப்பதினால் தேவனுக்குரியவைகளிலே பெலன் கொள்ளுகிறார்கள். தேவனுக்காய் வைராக்கியமாய் நிற்கின்றார்கள். தற்காலிக தோல்விகளுக்கு சொந்தக்காரர்களாக காணப்பட்டாலும் நிரந்தர வெற்றிக்கு உரியவர்களாயிருக்கிறார்கள். பாவம் பாவத்தின் வித்து இவர்களில் குடி கொள்ளாததினால் பாவத்துக்கும், இச்சைகளுக்கும், பொருளாசை, பணத்தாசைக்கும் அடிமைபடார்கள்.

நம்மை தேவர்களாக இருக்க செய்யவே இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினால் நம்மை மீட்டுள்ளார். நாம் மீட்கப்பட்டுள்ளோம். நாம் இவ்வுலகிற்குரியவர்களாக நம்மை காண்பித்து கொள்ளாமல் தேவனுக்குரியவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும் விளங்கச் செய்வோம்.

கர்த்தாவே நீர் உம்முடைய ஆவியை எங்களுக்கு தந்து உமது குமாரனின் சாயலாக மாற்றி எங்களை தேவர்களாக ஆக்கினதற்காய் ஸ்தோத்திரம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME