தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் நாம் திராட்சக் கொடியாக இருக்கிறோமா

தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் நாம் திராட்சக் கொடியாக இருக்கிறோமா?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் திராட்ச கொடியாக எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

திராட்சத் தோட்டத்தில் என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

Joh 15:1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.

  • திராட்ச தோட்டக்காரர்- பிதா
  • மெய்யான திராட்சக் கொடி – இயேசு கிறிஸ்து
  • கொடிகள் – கிறிஸ்துவின் சீஷர்கள் (கிறிஸ்தவர்கள்)

திராட்ச தோட்டத்திலே வேலை செய்யக்கூடியவர் யாராக இருக்கிறார்?

பிதாவாகிய தேவன் இங்கே வேலை செய்கிறார் என்பதை கவனியுங்கள்.

Joh 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

பிதாவாகிய தேவன் இரண்டு வேலை செய்கிறார்?

1) கிறிஸ்துவில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்.

2) கிறிஸ்துவில் கனி கொடுக்கிறகொடி எதுவோ அது அதிக கனிகளை கொடுக்கும் படி சுத்தம் பண்ணுகிறார்.

நாம் எப்படி சுத்திக்கரிக்கப்பட்டோம்?

Joh 15:3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

  • கிறிஸ்துவின் உபதேசம் மாத்திரமே உள்ளான மனுஷனை சுத்திகரிக்கக்கூடியதாக இருக்கிறது.

செடியாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கொடியாகிய நாம் நிலைத்து இருந்தால் தான் நாம் கனிக்கொடுக்க முடியும்.

Joh 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

நாம் எப்படி  கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருக்க முடியும்?

1Jo 2:17  தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

நிலைத்து இருப்பது என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கிறது?

1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை

  • நாம் பாவம் செய்யாமல் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்படியும்போது தான் அவருக்குள் நிலைத்து இருக்கிறோம்.

நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருந்தால் அவர் நம்மில் நிலைத்து இருக்கிறார். அப்படி இருந்தால் தான் நாம் மிகுந்த கனிகளை கொடுக்க முடியும்.

Joh 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திராவிட்டால் என்ன நடக்கும்?

Joh 15:6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

  • நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திராவிட்டால் எறியுண்டு உலர்ந்துபோய் எரிக்கப்படுவதற்கு அக்கினியிலே போடப்படுவோம்.

நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நிலைத்து இருக்கும் போது என்னசம்பவிக்கும்?

Joh 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

Joh 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

  • நாம் கேட்டுக்கொள்வதெதுவோ அது கொடுக்கப்படும்.
  • நாம் மிகுந்த கனிகளை கொடுப்போம்.
  • நாம் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் பிதா மகிமைப்படுவார்.
  • நாம் அப்போது தான் கிறிஸ்துவுக்கு சீஷராக இருக்க முடியும்.

நாம் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து இருக்க வேண்டும்.

Joh 15:9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

நாம் எப்படி கிறிஸ்துவின் அன்பிலே நிலைத்து இருக்க முடியும்?

Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

  • கிறிஸ்து பிதாவின் கற்பனைகளை கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்து இருந்தார்.
  • நாம் கிறிஸ்துவின் கற்பனைகளை கைக் கொள்ளுவதின் மூலமாக தான் அவருடைய அன்பிலே நிலைத்து இருக்க முடியும்.

ஒன்றான மெய் சபை தேவனுடைய திராட்ச கொடியாக இருக்கிறது. கிறிஸ்து செடியாக இருக்கிறார் பிதா திராட்சை தோட்டக்காரராக இருக்கிறார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME