தன் தாயின் வயிற்றில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ?

தன் தாயின் வயிற்றில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ?

அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். (யோவான் 3:4)

யோவான் 3:9; யோவான் 4:11,12; யோவான் 6:52,53,60; யோவான் 7:36; யோவான் 14:22; 1கொரிந்தியர் 1:18; 1 கொரிந்தியர் 2:14; 1 கொரிந்தியர் 15:35.

மறுபடி பிறத்தலை புரிந்துக்கொள்ளல்
புரிந்து கொள்வதில் பல முறைகள் உண்டு.
1. கற்று, அறிந்து, தெரிந்து புரிந்துக் கொள்ளுதல்.
2. கேட்கும் திறனால் யூகித்து புரிந்துக்கொள்ளுதல்.
3. பார்த்து புரிந்து கொள்ளுதல்.
4. தொட்டுப்பார்த்து புரிந்து கொள்ளுதல்.
5. புரிந்து கொள்ள முடியாமலே போகுதல்.

நிக்கெதேமு கேட்டு புரிந்து கொள்வதற்கு பதில் தவறாக புரிந்துக்கொண்டான்.

– மறுபடி பிறத்தல் என்பது தாயின் வயிற்றிலிருந்து மறுபடி பிறப்பதல்ல.

– மறுபடி பிறத்தல் என்பது மரித்து அடக்கம் செய்யப்பட்டு மறுபடி உயிர்ப்பிக்கபடுவதல்ல.

– மறுபடி பிறத்தல் என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாவது அல்ல, கிறிஸ்து அவனிலும், அவன் கிறிஸ்துவிலும் வாழ்வது.

கர்த்தருடைய வாக்கியங்களை பலர் பலவிதங்களில் வியாக்கியானம் செய்கின்றனர்.

சிலர் பொருள் புரியாது வியாக்கியானம் செய்கின்றனர்.

சிலர் தவறான பொருள் கொடுத்து வியாக்கியானம் செய்கின்றனர்.

சிலர் ஒன்றை விவிலியம் சாராத ஒன்றோடு தொடர்பு படுத்தி வியாக்கியானம் செய்கின்றனர்.

வேறு சிலர் வெளிப்பாடுகளின் அடிப்படையில் வியாக்கியானம் செய்கின்றனர்.

பிறிதொருவர் ஒன்றை விவிலியத்தின் இன்னொரு பகுதியோடு இணைத்து வியாக்கியானம் செய்கின்றனர்.

இன்னும் சிலர் ஒரு பகுதியை அப்பகுதியிலே மட்டும் நின்று வியாக்கியானம் செய்கின்றனர்.

வியாக்கியானம் மாறலாம்.

பொருள் மாறலாகாது.உபதேசம் மாறலாகாது. கருத்து மாறலாகாது.
நிகழ்வுகளின் மூன்று அடிப்படைகளாகிய – கடந்த, நிகழ், வருங்கால சத்தியங்கள் மாறலாகாது.

கர்த்தாவே, நீர் எங்கள் விசுவாசத்திற்கு ஆதாரமூலமாக தந்துள்ள உமது விவிலியத்தை சரியாக புரிந்துக்கொண்டு வியாக்கியான படுத்த எங்கள் இருதயங்களை திறந்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME