இந்தத் தண்ணீர் தாகமுண்டாக்கும், நான் தரும் தண்ணீர் தாகமுண்டாக்காது.
Whoever drinks of this water will thirst again,but whoever drinks of the water that I shall give him will never thirst. (John 4:13,14)
Jn6:27,49; Jn11:26; Jn17:2,3; Lk16:23-26; Rom6:23; Rev7:16; Isa49:10; Isa65:13,14.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
யோவான் 4:13,14
யோவான் 6:27,49; யோவான் 11:26; யோவான் 17:2,3; லூக்கா 16:23-26; ரோமர் 6:23; வெளி 7:16; ஏசாயா 49:10; ஏசாயா 65:13,14.
தாகம் தீர்க்கும் நீர்.
இயற்கை நீர் உயிர் தரும்,
இயற்கை உணவு உயிர் உணவு,
இயற்கை காற்று உயிர் காற்று,
ஆம் இதில் சந்தேகமில்லை.
ஆனால்,
– இந்த இயற்கை நீரும் மறுபடியும் தாகமடைய செய்யும்,
– திருப்தியற்ற நிலையை உண்டாக்கும்,
– குறைவுபட்ட மனோபாவத்தில் நம்மை வைத்திருக்கும், நிலையற்ற சூழலையே உருவாக்கும்,
இயேசு கொடுக்கும் நீர்..
இதை பெறுகிறவர்….
– தாகமில்லாதவனாயிருப்பான்.
– திருப்தியடைந்த நிலையை உணர்வான்.
– நிறைவு பெற்றேன் என்ற பரிபூரண நிலையில் இருப்பான்.
– நிலையற்ற உலகில் நிலைத்திருப்பதின் உண்மையை விளங்கி கொள்வான்.
– சமாதானமாக வாழ்வான்.
– பிறரின் தாகம் தீர்க்க விரைவான்.
இயேசு கொடுக்கும் நீர் தாகமுண்டாக்காது. ஏன்?
இது மொண்டு கொள்ளுகிற நீர் அல்ல,
இது மனித முயற்சியால் உருவாக்கப்படுகிற நீர் அல்ல,
இது இயற்கையின் நீர் அல்ல,
இது மண்டையில் சுரக்கும் அறிவு நீர் அல்ல, இது உள்ளத்தில் சுரக்கும் நீர்.
மனித பகுத்தறிவுவாதிகளே, தத்துவஇயல்வாதிகளே, உளவியல் வல்லுநர்களே, விஞ்ஞான பெருந்தகைகளே, கல்விமான்களே, மதவாதிகளே, தீவிரவாதிகளே, தீவிர சிந்தனை கொண்டவர்களே.
நீங்கள் தாகமேற்படாமல் இருக்க இயேசுவண்டை வாருங்கள். உங்கள் உலக அடையாளத்துக்கு உங்களின் முயற்சி பெருமை தேடிதந்திருக்கலாம். உங்கள் ஆன்மாவுக்கு பெயர் உண்டாகவும், திருப்தி உண்டாகவும் இயேசுவண்டை வாருங்கள்.
கர்த்தாவே, படைத்த உம் ஆலோசனைகளை நாங்களும் கேளாமல் வாழ்ந்தோம். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்றதுபோல நாங்கள் படாதபாடுபட்ட பின்பே உம் தாகமில்லா நீரை பெற்றுக்கொண்டோம். எங்களின் தாகம் தீர்க்கபட்டதுபோல யாவரின் தாகம் தீர்க்கபட உதவும்.