பேதுரு பாவமன்னிப்புக்காக என்ன செய்யும்படி ஜனங்களுக்கு கட்டளையிட்டார்

பேதுரு பாவமன்னிப்புக்காக என்ன செய்யும்படி ஜனங்களுக்கு கட்டளையிட்டார்?

ஒன்றான மெய் சபையைக் குறித்ததான சத்தியங்களைக்கற்றுக் கொண்டு வருகிறோம்.

முதல் சுவிசேஷ பிரசங்கத்தை போதித்த அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரசங்கத்திலிருந்து அநேக காரியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது பாமன்னிப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு போதித்தார் என்று பார்ப்போம்.

பேதுரு நீங்கள் சிலுவையில் அறைந்து இயேசுவை தான் தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று பிரசங்கித்தார்.

Act 2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

  • யூதர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை  கேள்விப்பட்ட போது அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
  • சுவிசேஷம் அவர்களிடத்தில் மிகப்பெரிய மனமாற்றத்தை கொண்டு வந்தது என்பதை கவனியுங்கள்.
  • இன்றைக்கு எத்தனை பேர் சுவிசேஷத்தைக் கேட்க விரும்புகிறார்கள், நீங்கள் தேவனுடைய சுவிசேஷத்தைக் கேட்க விரும்பம் இல்லையென்றால் நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்.

பேதுரு அதற்கு அவர்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றார்.

Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

ஞானஸ்நானம் பெறுகின்ற போதுவாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரம் கிடைக்கும் என்று போதித்தார்.

அங்கே இருந்த யூதர்கள் இரட்சிக்கப்படுவதற்கு மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற வேண்டியது அவசியம் என்பதை பேதுரு அவர்களுக்கு கட்டளையிட்டார்.

நீங்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்தால்தான் பாவமன்னிப்பை பெற்று  இரட்சிக்கப்பட முடியும்என்பதை விசுவாசிக்கிறீர்களா? அநேகர் இதை ஏற்றுக் கொள்ளுவதில்லை அவர்கள் பேதுரு மூலமாக தேவன்  கொடுத்த கட்டளையை புறம்பே தள்ளுகிறார்கள். இந்த வசனத்தை அநேகர் வெறுக்கிறார்கள்.

ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியின் வரத்திற்கான வாக்குத்தத்தம் புறஜாதிகளுக்கும் கொடுக்கப்படும் என்று பேதுரு அவர்களுக்கு போதித்தார்.

Act 2:39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விட்டு விலகிவர வேண்டும் என்று அவர்களுக்கு புத்தி சொன்னார்.

Act 2:40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

  • நாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பதாக மாறுபாடுள்ள சந்ததியிலிருந்து (உலகத்திலிருந்து) பிரிந்து வெளியே வர வேண்டியதாய் இருக்கிறது.
  • ஏனென்றால் உலகத்தாருடைய துர்கிரியைகளுக்கு ஒரு போதும் நாம் பங்காளிகளாக இருக்கக்கூடாது.

அந்த வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு என்ன செய்தார்கள்?

Act 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அவர்கள் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கொன்று ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.

இந்த வேத வாக்கியத்தை பாருங்கள் மூவாயிரம் பேர் எங்கே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்?

அவர்கள் கர்த்தரால் சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

act 2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

சபை என்ற வார்த்தைக்கு ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.

G1577

ἐκκλησία

ekklēsia

ek-klay-see’-ah

From a compound of G1537 and a derivative of G2564; a calling out

வெளியே அழைக்கப்பட்டவர்கள்

உலகத்திலிருந்து வெளியே பரிசுத்தத்திற்கு தேவனால் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒன்றான மெய் சபையில் உள்ளே பிரவேசிப்பதற்கு ஒவ்வொரும்வரும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும் போது அவர்களை கர்த்தர் தான் சபையிலே சேர்க்கிறார்.

ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அவர்கள் சபையில் சேர்க்கப்பட்ட பிற்பாடு என்ன போதிக்க வேண்டும்?

Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். …

இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும் படி அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும்.

  • இன்றைக்கு எத்தனை சுவிசேஷ கூட்டங்களில் மனந்திரும்புதலைக் குறித்தும் ஞானஸ்நானத்தைக் குறித்தும்ஒன்றான மெய் சபையைக் குறித்தும் பிரசங்கிக்கிறார்கள்?
  • இன்றைக்கு அநேக கிறிஸ்தவ கூட்டங்களில் அற்புதம் செய்கிறோம் பிசாசுகளை விரட்டுகிறோம் என்று தான் விளம்பரம் செய்கிறார்களே தவிர மனந்திரும்புதலைக் குறித்தும், பாவமன்னிப்புக்கென்று  ஞானஸ்நானத்தைக் குறித்தும் யாரும் அக்கரையாக இருப்பதில்லை அதைக் குறித்து போதிப்பதும் இல்லை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME