நான் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்

நான் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்?

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50)

யோவான் 11:40; யோவான் 20:29; யோவான் 3:12; யோவான் 10:25; யோவான் 12:37; லூக்கா 1:45; லூக்கா 7:9; மத்தேயு 13:12f; 2கொரிந்தியர் 9:6; செப்பனியா 3:2.

விசுவாசம் என்பது பலவிதங்களில் மனிதரிடையில் கிரியை செய்கின்றது.

– சிலர் காண்பதினால் கர்த்தரை விசுவாசிக்கின்றனர். யோவான் 20:8,9

– சிலர் இயேசுவை குறித்தோ, அவரின் கிரியைகள் குறித்தோ கேட்டு விசுவாசிக்கின்றனர். யோவான் 4:41; அப்போஸ்தலர் 4:4; ரோமர் 10:17

– சிலர் விவிலியம் அல்லது வசனம் வாசித்து – படித்து – கற்று விசுவாசிக்கின்றனர். யோவான் 20:31

– சிலர் தங்கள் வாழ்க்கையில் சில நன்மைகளை அனுபவித்ததின் மூலம் விசுவாசிக்கின்றனர். யோவான் 4:53

– சிலர் பரிசுத்த ஆவியின் அகதூண்டுதலினால் விசுவாசிக்கிறார்கள். எபிரெயர் 12:1;கலாத்தியர் 6:22; 1கொரிந்தியர் 12:9

நாம் நம்முடைய விசுவாச ஆரம்பத்தை பின்னோக்கி பார்க்கலாமா?

அந்த விசுவாசம் உண்மையானதாகவே இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கலாமா?

நிலைத்திருக்கிற – வழுவாதிருக்கிற – கவிழாமலிருக்கிற – சேதபடாமலிருக்கிற விசுவாசமே மேல். கிறிஸ்துவில் நிலைத்திருப்பதே விசுவாசம்.

தேவஜனமே கொஞ்சநாள் விசுவாசத்தை எடுத்து செல்வதற்கு பதில் விசுவாசத்தை உன்னில் துவங்கிய கிறிஸ்துவுக்குள்ளே மறைந்து வாழுங்கள்.

சத்துரு என்ற கார்மேகம் மறையுமட்டும் அவர் மறைவில் இருந்து விசுவாசத்தை மெருகேற்றுவோம்.

God bless you

ADD YOUR COMMENT

Powered By Indic IME