சீமோனே, நீ கேபா என்னபடுவாய். கேபா என்றால் பேதுரு என்று அர்த்தம்.

சீமோனே, நீ கேபா என்னபடுவாய். கேபா என்றால் பேதுரு என்று அர்த்தம்.

பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். (யோவான் 1:42)

யோவான் 21:2; மத்தேயு 14:28; மத்தேயு 15:15; மத்தேயு 16:16,18; மத்தேயு 19:27; மத்தேயு 26:35,75; அப்போஸ்தலர் 1:15; அப்போஸ்தலர் 2:38; அப்போஸ்தலர் 3:1; அப்போஸ்தலர் 4:8,19; அப்போஸ்தலர் 8:20

இவருக்கு மூன்று பெயர்கள் உண்டு…..
சீமோன்….
கேபா……
பேதுரு…..
கேபா மற்றும் பேதுரு என்றால் பாறை என்று பொருள்.

பெயர் மாற்றம்…

– இது தேவனுடைய திட்டத்திற்கான பெயர் மாற்றம்.

– இது ஒரு புது சகாப்தம் துவங்குவதற்கான அடையாளமான பெயர் மாற்றம்.

– இது தேவனுடைய விருப்பதன்மையை வெளிப்படுத்துவதற்கான பெயர் மாற்றம்.

– இது தேவனால் முழுவதும் கட்டுபடுத்தபடுவதற்கான பெயர் மாற்றம்.

– இது கிறிஸ்து என்ற பெயர் பெற்ற மூலைகல்லின் மேல் வைக்கப்படும் முதல் கல்லாயிருப்பதற்கான பெயர் மாற்றம்.

இன்று நமது பெயர்கள் தேவனுடைய கெஜட்டில் பதிவேற்றப்பட எத்தகைய பெயர்கள் உடையவர்களாய் இருக்கிறோம்?

– நம்மை குறித்து தேவனுடைய திட்டம் இருக்குமானால் நம் பெயர் கட்டாயம் மாற்றப்பட்டாக வேண்டும்.

– அவர் நம்மை முற்றிலும் கட்டுபடுத்த அவரிடம் நம்மை சரணாகதி அடைய செய்ய பெயர் மாற்றம் அவசியம்.

– தூஷண நாமங்கள் உடையவர்களாய் தேவனுடைய பிள்ளைகள் காணப்படுவதை ஒருபோதும் தேவன் விரும்ப மாட்டார்.

– புது சிருஷ்டியின் அனுபவங்களின் வெளிப்படையான மாற்றம் மூன்று…
தோற்றத்தில் மாற்றம்…
குணத்தில் மாற்றம்…
பெயரில் மாற்றம்…

ஒரு மனிதனுக்கு இரு பிறப்புண்டு…

இயல்பான பிறப்பு…
அவன் தாய்தகப்பன் அவனை பெற்றெடுத்து அவனுக்கு தங்கள் குல வழக்கத்தின்படி பெயர் சூட்டுகிறார்கள்.
அவன் பாவத்திலே பிறக்கின்றான்.
நரகத்திலே மடிகின்றான்.
இப்பிறப்பு இங்கே முடிவுறுகின்றது.

கிறிஸ்துவுக்குள் பிறப்பு…
அவன் கிறிஸ்துவின் மீட்பினால் இரட்சிக்கபட்டு தேவனுக்குள் – கிறிஸ்துவுக்குள் – ஆவிக்குள் பிறக்கின்றான்.
இக்குலப்படி அவனுக்கு பெயர் சூட்டப்படுகிறது.
அவன் கிறிஸ்துவுக்குள் பிறந்து தேவ இராஜ்ஜியத்தை அடைகின்றான்.
இதனால் பழையவைகள் ஒழிந்தன.
எல்லாம் புதிதாயின.

நாம் மாறுவோம். பிறரை மாற்றுவோம். ஏசாயா 62:2; ரோமர் 7:6

ADD YOUR COMMENT

Powered By Indic IME