சபைஸ்தாபிக்கப்பட்ட நாளில் பேதுரு இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைப்பற்றி பிரசங்கித்தாரா

சபைஸ்தாபிக்கப்பட்ட நாளில் பேதுரு இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைப்பற்றி பிரசங்கித்தாரா?

ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அதனுடைய உபதேசங்களையும் குறித்தும் கற்றுக் கொண்டு வருகிறோம்.

  • இன்றைக்கு கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டங்களில் சுவிசேஷம் என்று கிறிஸ்துவின் அற்புதங்கள் மாத்திரமே பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால், சுவிசேஷம் என்பது கிறிஸ்து செய்த அற்புதங்கள் அல்ல ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவதற்கான தேவனுடைய வார்த்தைகளே சுவிசேஷமாக இருக்கிறது.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட போது பேதுரு கிறிஸ்துவின் அற்புதங்களைப் பற்றி பேசினாரா?

இல்லை இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்தார்

Act 2:22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதற்கு இந்த வசனத்திலே ஆதாரம் என்ன?

  • தேவன் பலத்தை செய்கைகள், அற்புதங்கள், அடையாளங்கள் இவைகளைக் கொண்டு தான் கிறிஸ்துவை வெளிப்படுத்தினார்.
  • கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதற்கு அவைகள் ஆதாரங்களாக இருக்கிறது.

பேதுரு முதல் சுவிசேஷப்பிரசங்கம் செய்த போது கிறிஸ்துவைப் பற்றி அநேக சத்தியங்களை வெளிப்படுத்தினார்.

இயேசுகிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்று பிரசங்கித்தார்.

Act 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

இயேசு கிறிஸ்து பாடுபட்டுசிலுவைக்கு போக வேண்டும் என்று தேவனுடைய ஆலோசனையாக இருந்தது.

இயேசுகிறிஸ்துவை தேவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று பேதுரு பிரசங்கித்தார்.

Act 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு தேவனால் எழுப்பப்படுவார் என்று தாவீது சொன்ன தீர்க்கதரிசனத்தை பேதுரு மேற்கோள் காண்பித்தார்.

Act 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

இயேசுகிறிஸ்துவை தேவன் உயிரோடு எழுப்பினார் என்பதற்கு அப்போஸ்தலர்களாகிய நாங்கள் சாட்சிகள் என்று பேதுரு பிரசங்கித்தார்.

Act 2:32 இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவை தேவன் எழுப்பினார் என்பதற்கு அப்போஸ்தலர்கள் மெய்யான சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

பிதாவின்வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியானவரை அனுப்பி பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுத்தவர் கிறிஸ்து தான் என்று பேதுரு பிரசங்கித்தார்.

Act 2:33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

கிறிஸ்துசகல அதிகாரமும் பெற்று பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று தெளிவாக போதித்தார்.

Act 2:34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும்,

Act 2:35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

இயேசு சாதாரணமான மனிதர் இல்லை என்பதையும் தேவன் அவரை ஆண்டவரும்(கர்த்தரும்) கிறிஸ்துவுமாக்கி இருக்கிறார் என்று திட்டமாக அவர்களுக்கு போதித்தார்.

Act 2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

இயேசுவை நீங்கள் தான்சிலுவையில் அறைந்தீர்கள் என்று அவர்களுக்குப் போதித்தார்.

இதைகேட்டபோது அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள், தாங்கள் செய்த இந்த காரியத்திற்காக என்ன செய்ய வேண்டும் என்று பேதுருவிடம் கேட்டார்கள்.

Act 2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

அங்கே இருந்த அநேக யூதர்கள் இருதயத்திலே குத்தப்பட்டு மனந்திரும்பினார்கள்.

பேதுரு அவர்கள் செய்த பாவத்திற்காக ஒவ்வொருவரும்  மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றுகட்டளையிட்டார்.

Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

இயேசுகிறிஸ்து வாக்களித்தது போல மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் முதன் முதலில் எருசலேமில் தான் தொடங்கியது.

Luk 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேமில் தொடங்கியது.

அப்போஸ்தலர்களின் இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதின் ஒரு நோக்கம் என்னவாக இருந்தது?

மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கொன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறவேண்டும்.

  • இன்றைக்கு எத்தனை சுவிசேஷக்கூட்டங்களில் கிறிஸ்துவின் பாடு மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலைக் குறித்தும் மனந்திரும்புதலைக் குறித்தும் பாவமன்னிப்பைக்குறித்தும் பிரசங்கிக்கிறார்கள்?

ADD YOUR COMMENT

Powered By Indic IME