சத்தியத்திற்கு

யோவான் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்

You have sent to John, and he has borne witness to the truth.(John 5:33)
Jn1:6-8,19-37; Jn3:26-36; Mt21:24,27-32; Act13:24,25; Act19:1-7; 2Jn1:1,4; 3Jn1:1-8,12; Jn8:32,40,44,46; Jn14:6; Jn16:7; Jn17:19; Jn18:37.

நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். (யோவான் 5:33)

யோவான் 1:6-8,19-37; யோவான் 3:26-36; மத்தேயு 21:24,27-32; அப்போஸ்தலர் 13:24,25; அப்போஸ்தலர் 19:1-7; 2 யோவான் 1:1,4; 3 யோவான் 1:1-8,12; யோவான் 8:32,40,44,46; யோவான் 14:6; யோவான் 16:7; யோவான் 17:19; யோவான் 18:37.

சத்தியத்திற்கு சாட்சி:

சத்தியம் என்பதின் மூலச்சொல் aletheia -அலேத்தியா. இச்சொல் பு.ஏ ல் 110 தடவைகள் வருகின்றன.
யோவான் ஸ்நானகன் தேவனால் அனுப்பபட்ட இயேசுகிறிஸ்துவை சத்தியமாக ஏற்றுக்கொண்டார். யோவான் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதினால் அந்த சத்தியத்தை குறித்து சாட்சி கொடுக்க தேவனால் அனுப்பப்பட்டார். தன்னை குறித்து குறைத்தும் சத்தியமாகிய இயேசுவை குறித்து மிகைப்பட – தேவன் தனக்கு கொடுத்த வெளிப்பாடுகளின் அடிப்படையில் சாட்சி கொடுத்தார். இதனை இயேசுகிறிஸ்து ஏற்றுக்கொண்டு யோவானை குறித்து சாட்சியிடுகின்றார்.

யோவான் ஸ்நானகன்:

1. சத்தியத்தை குறித்த வெளிப்பாட்டை பெற்றவர்.
2. சத்தியத்தை அறிந்தவர்.
3. சத்தியத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவர்.
4. சத்தியத்தை சத்தியமாக அறிவித்தவர். 5. சத்தியத்தின்படி வாழ்ந்தவர்.
6. சத்தியத்தோடு எதனையும் கலவாது பார்த்துகொண்டவர்.
7. சத்தியத்திற்காய் மரித்தவர்.
8. சத்தியத்தினிமித்தம் சாட்சி பெற்றவர்.
9. சத்தியத்தின் உயிர் சாட்சியாய் உயர்ந்து நிற்பவர்.

அன்பான தேவனுடைய ஜனமே நாம் அறிந்துள்ள சத்தியம் நம்மை யாரோடு இணைத்து எங்கே நம்மை நிறுத்தியிருக்கின்றது என்பதை சிந்திப்பீர்.
யோவானைபோல கலப்பில்லாத – தூய நறுமணம் மிகுந்த சாட்சிகள் நம் தேசத்தில் – சபைகளில் – குடும்பங்களில் எழும்பினால் தேவன் மகிமைப்படுவார்.

நீங்கள் சத்தியத்திற்காய் மரிக்க ஆயத்தமா? கர்த்தாவே, சத்தியமாகிய நீர் உமது மகனை சத்தியராக அனுப்பியதை நாங்கள் அறிந்து, எங்களுக்கு வெளிப்படுத்தபட்டுள்ள சத்தியத்திற்கு நாங்கள் சாட்சிகளாகவும் – ஜீவனுள்ள சாட்சிகளாகவும், சத்திய விதைகளாகவும் மாறி எங்கள் பகுதிகளில் அவை முளைத்தெழும்பி அனேகரை விடுதலையாக்க எங்களுக்கு உதவி செய்யும். சத்தியரே, உம் உன்னத ஊழியரை கனப்படுத்தியதுபோல எங்களையும் கனப்படுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME