நாமத்தில்

ஒன்றான மெய் சபை ஏன் கிறிஸ்துவின் நாமத்தில் அழைக்கப்பட வேண்டும்?

அநேகர் சபையானது எந்த நாமத்தில்(பெயரில்) அழைக்கப்பட்டால் என்ன? எல்லாம் தேவனுடைய சபைதானே என்று கேட்கிறார்கள்.

ஆனால் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த மனிதனும் அவருடைய சபைக்கு உரிமையாளராக முடியாது. ஏனென்றால் இயேசு கிறிஸ்து அந்த சபைக்கு தம்முடைய இரத்தத்தை(ஜீவனை) கொடுத்தபடியினால் அவர் தான் அதன் உரிமையாளராக இருக்கிறார்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சுயரத்தத்தினாலே தம்முடைய சபையை சம்பாதித்து இருக்கிறார்.

Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

நாம் ஏன் பவுலுடைய நாமத்தினாலோ அல்லது மற்ற நாமத்தினாலோ சபையை அழைக்கக் கூடாது?

1Co 1:13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

பவுலா நமக்காக சிலுவையில் அறையப்பட்டார்?

பவுலுடைய நாமத்தினாலேயா நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம்?

பவுல் நமக்காக சிலுவையில் அறையப்படவில்லை. பவுலுடைய நாமத்தினால் நாம் ஞானஸ்நானம் பெறவும் இல்லை.

அப்படி இருக்கும் போது நமக்காக சிலுவையில் அறையப்படாதவர்களின் நாமங்களை ஏன் சபைக்கு பயன்படுத்துகிறோம்?

இன்றைக்கு அநேகர் ஒவ்வொரு மனுஷனுடைய நாமங்களிலும் பிறநாமங்களிலும் சபைகளை வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

1) பேதுரு சபைகள்

2) பவுல் சபைகள்

3) யோவான் சபைகள்

4) 7th day சபைகள்

5) ரோம சபைகள்

6) பெந்தெகொஸ்தே சபைகள்

7) தென்னிந்திய வட இந்திய சபைகள்

8) மணவாட்டி சபைகள்

9) இயேசுவின் சபைகள்

10) தேவனின் ஆலய சபைகள்

11) பரிசுத்த ஆலய சபைகள்

12) பரிபூரண சுவிசேஷ சபைகள்

இப்படி 5000 த்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் இன்றைக்கு உலகத்தில் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்த சபைகளா இவைகள்?

உலக பிரகாரமான உதாரணம் ஒன்றை தருகிறேன்.

நீங்கள் சொந்தமாக வீடுகட்டுகிறீர்கள் அதில் யாரெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள்.

1) மேஸ்திரி

2) கொத்தனார்

3) சித்தாள்

4) எலக்டீரிசன்

இன்னும் அநேகர் வீடு கட்டுவதற்கு வேலை செய்யலாம். உங்கள் வீடு கட்டி முடித்தபின்பு மேலே சொன்ன யாருடைய பெயரை வைப்பீர்கள்.

மேலே சொன்ன யாருடைய பெயரையும் நீங்கள் நிச்சயமாக வைக்க மாட்டீர்கள் ஏனென்றால் அவர்கள் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள் இல்லை.

அந்த புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு உரிமையாளர் நீங்கள் தான் அந்த வீட்டிற்கு உங்களுடைய பெயரை தானே வைப்பீர்கள்.

கிறிஸ்து தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்த சபையிலே அப்போஸ்தலர்களுடைய பெயரையோ அல்லது மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரையோ அல்லது மற்ற மனுஷர்களுடைய நாமத்தையோ பயன்படுத்தும் போது நாம் நீதியாய் இருக்கிறோமா?

கிறிஸ்து என்ற கன்மலை மீது தேவன் சபையை கட்டி இருக்கும் போது அந்த நாமத்தை நாம் பயன்படுத்தாமல் மனுஷர்களுடைய நாமத்தைபயன்படுத்தி அழைக்கும் போது அது மெய்யான சபையாக எப்படி இருக்க முடியும்?

Mat 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

இன்னும் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது என்றும் அந்த ஒன்றான மெய்திருச்சபையின் உபதேசம் என்ன என்றும் கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME