போவார்

இவரை நாம் காணக்கூடாதபடிக்கு எங்கே போவார்?

Jews.Where does He intend to go that we shall not find Him? (John 7:35)
Isa11:12; Isa27:12,13; Zep3:10; Ps67:1,2; Ps98:2,3; Isa49:6; Mt12:21; Lk2:30-32; Act11:18; Act13:46-48; Act22:21; Eph3:8; 1Ti2:6,7.

அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம் பண்ணுவாரோ?  (யோவான் 7:35) 

ஏசாயா 11:12; ஏசாயா 27:12,13; செப்பனியா 3:10; சங்கீதம் 67:1,2; சங்கீதம் 98:2,3; ஏசாயா 49:6; மத்தேயு 12:21; லூக்கா 2:30-32; அப்போஸ்தலர் 11:18; அப்போஸ்தலர் 13:46-48; அப்போஸ்தலர் 22:21; எபேசியர் 3:8; 1தீமோத்தேயு 2:6,7.

எங்கே போவார்?

இயேசுவின் பிறப்பாகிய முதல் வருகையை விளங்கிக்கொள்ளாத யூதர்கள் அவர் எங்கே போகிறார் என்றும் தெரியாதவர்களாயிருந்தனர். தேவன் யூதகுலத்தை மீட்கவும் விரும்பினார்.
புறஜாதியாரையும் மீட்கவும் விரும்பினார்.
இயேசுகிறிஸ்து சபையை போஷிக்கவும் விரும்புகிறார்.
சபையைக்கொண்டு புறஜாதிகளை இரட்சிக்கவும் விரும்புகிறார்.
எனவே அவரின் விருப்பம் கடைமனிதன் மீட்கபடுவதிலும் அமைந்துள்ளது என்று நம்புவோமாக.

அவர் எங்கே போவார். இஸ்ராயேலரிடையில் வந்தவர் புறஜாதிகளிடையிலும் செல்வார். அவர்தம் மரணத்தின்மூலம் பாதாளம் வரையிலும் செல்வார்,
பரலோகம் வரையிலும் செல்வார்.

அவர் தம் எழுகையின்மூலம் தந்தையிடமும் செல்வார்.
நம்மை தந்தையிடம் சேர்க்க திரும்ப வரவும் செய்வார்.

அவரின் முதல் வருகையை எவராலும் தடுக்க முடியவில்லை.
அவரின் மரணத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவரின் உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இனி அவரின் ரகசிய வருகையையும், இரண்டாம் வருகையையும் எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

விசுவாசிக்கின்ற உன்னிடம் அவர் வந்து உன்னில் கிரியை செய்வதையும் ஒருவராலும் தடுகவியலாது.

கர்த்தாவே, உம் மகன் வந்ததை அறியாததுபோல அவர் உம்மிடம் வந்துள்ளதையும் அறியாமல் திகைக்கின்றது உலகம். என்றாலும் அவரை அனுப்பப்போகிறீர். வாரும் அவரை காண நாங்கள் காத்திருக்கிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME