உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்
இன்றைக்கு கவலைப்படாத மனிதன் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது.
எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஐசுவர்யமுள்ள மனிதன் முதல் தரித்திரன் வரை கவலைகள் இருக்கிறது. ஆனால் கவலைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.
தேவன் நம்மை பூமிக்குரிய கவலையற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்.
நம்முடைய கவலை நம்முடைய இருதயத்தை ஒடுக்கும்.
நீதிமொழிகள் 12:25 மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
கவலை உங்கள் இருதயத்தை ஒடுக்கி விடும் என்று தேவன் எச்சரிக்கிறார். நம்மில் எத்தனை பேர் இந்த எச்சரிப்புக்கு செவி கொடுக்கப்போகிறோம்?
நம்முடைய இருதயம் உலக கவலைகளினால் பாரமடையக் கூடும்.
லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
நாம் அநேக காரியங்களைக் குறித்து மார்த்தளைப் போல கவலைப்பட்டு கலங்குகிறோம்.
லூக்கா 10:41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
- மார்த்தாளைப் போல அநேக காரியங்களை குறித்து கவலைப்படுகிறோம், ஆனால் நமக்கு தேவையான ஒன்றைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
- அது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்பது தான். அது பெரும்பாலும் இந்த காரியங்களைக் குறித்தெல்லாம் நாம் கவலைப்படுதில்லை.
- மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை பெறுவதற்கு முயற்சி செய்து அதை பெற்றுக் கொண்டாள்.
- இந்த நல்ல பங்கை பெற்றுக் கொள்ள நாம் ஆவிக்குரிய கவலையுடையவர்களாக இருக்க வேண்டும்.
நாம் பூமிக்குரிய காரியங்களில் கவலைப்பட்டால் என்ன இலாபம் இருக்கிறது?
பூமிக்குரிய காரியங்களில் கவலைப்படுகிறதினாலே எந்த இலாபமும் இல்லை.
மத்தேயு 6:27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
லூக்கா 12:26 மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
- நாம் பூமிக்குரிய காரியங்களுக்காக கவலைப்படுவதினாலே எந்த பிரயோஜனமும் இல்லை என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார்.
- நாம் அற்பமான காரியங்கள் முதலாய் நாம் செய்யக்கூடாமல் இருக்கும் போது நாம் ஏன் மற்றவைகளுக்காக கவலைப்பட வேண்டும்.
நாம் உணவுக்காகவும் உடைக்காகவும் கவலைப்படாக்கூடாது.
மத்தேயு 6:25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
மத்தேயு 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
- எல்லாருடைய கவலையும் போஜனத்தை பற்றியும் உடைகளைப் பற்றியும் தான் நான் இதை எப்படி பெற்றுக் கொள்ளுவது அல்லது சம்பாதிப்பது என்பது தான்.
- நாம் போஜனத்திற்காகவும் உடைக்காகவும் கவலைப்படக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
- தேவன் நமக்கு விசேஷித்தவைகளை கொடுத்து இருக்கிறார் அது சரீரம் நமக்குள் இருக்கக்கூடிய ஜீவனும் தான்.
- நம்மை சிருஷ்டித்த தேவன் உணவையும் உடையையும் தந்தருளுவார் என்கிற விசுவாசம் அவர்மேல் இருக்க வேண்டும்.
உணவையும் உடையையும் யார் நாடித்தேடுகிறார்கள்?
மத்தேயு 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
- தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் அஞ்ஞானிகளாக இருக்கக் கூடாது.
- நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் தேவன் அறிந்து இருக்கிறார் அவரிடத்தில் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் ஏன் உணவுக்காகவும் உடைக்காவும் கவலைப்படக்கூடாது?
மத்தேயு 6:26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
மத்தேயு 6:29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
- தேவன் நம்மை எப்படி பிழைப்பூட்டுவார் என்ற கேள்வி இருக்கும் என்றால் இயேசு கிறிஸ்து காகங்களை கவனிக்கும்படி சொல்லுகிறார்.
- காகங்கள் உணவுக்காக விதைப்பதும் அறுப்பதும் களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை, அவைகள் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படுவதும் இல்லை. ஆனால் அந்த காகங்களையும் தேவன் போஷிக்கிறார்.
- அடுப்பில் போடப்படும் புல்லை தேவன் அழகாக உடுத்தி வைத்து இருக்கும் போது மாம்சத்தையும் ஜீவனையும் நமக்கு கொடுத்த தேவன் நமக்கு உடையைக் கொடுப்பது அதிக நிச்சயமாய் இருக்கிறது.
உணவும் உடையையும் பரமபிதா நமக்கு கொடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
- தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய ராஜ்யத்தை தேடும் போது தேவன் நமக்கு உணவையும் உடையையும் நமக்கு வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்.
- நாளைய தினத்தைக் குறித்து நாம் ஒருபோதும் கவலைப்படக் கூடாது.
நாம் ஒன்றுக்குங் கவலைப்படாமல் தேவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
- நாம் ஒன்றுக்குங் கவலைப்படாமல் தெரியப்படுத்த நமக்கு தேவன் இருக்கிறார்.
- நாம் செய்ய வேண்டியது நமது விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.
1பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
- நம்மை விசாரிப்பதற்கு நம்முடைய கவலைகளை ஏற்றுக் கொள்ளுவதற்கும் ஒருவர் இருக்கிறார் அவர் தான் நம்முடைய தேவன்.
- அவர் மேல் நம்முடைய கவலைகளை வைத்து விட்டு அவரிடத்திலிருந்து சமாதானத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
கிறிஸ்துவின் நிமித்தம் வரக்கூடிய பாடுகளுக்காக கவலைப்படலாமா?
கிறிஸ்துவின் நிமித்தம் வரக்கூடிய பாடுகளுக்காக நாம் கவலைப்படாமல் அதை சந்தோஷமாக எண்ண வேண்டும்.
அப்போஸ்தலர் 5:41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
- கிறிஸ்துவின் நிமித்தம் வரக்கூடிய பாடுகளுக்காக நாம் ஒருபோதும் கவலைப்படக் கூடாது.
- கிறிஸ்துவின் நிமித்தம் எந்தபாடுகள் வந்தாலும் அதை கவலையாக எண்ணாமல் சந்தோஷமாக எண்ண வேண்டும்.