கலங்கும் நீர்… குணமாகும் வியாதி.
troubled the water, healing of disease. (John 5:1-4)
2Kin5:10-14; Eze47:8; Zec13:1; Zec14:8; 1Cor6:11; 1Jn1:7.
கலங்கும் நீர்… குணமாகும் வியாதி. (யோவான் 5:1-4)
2இராஜாக்கள் 5:10-14; எசேக்கியேல் 47:8; சகரியா 13:1; சகரியா 14:8; 1கொரிந்தியர் 6:11; 1 யோவான் 1:7.
பெதஸ்தா:
பெதஸ்தா என்றால் இரக்கத்தின் வீடு, புரண்டோடும் நீர் என பொருள் படுகின்றது.
இப்பகுதியில் பெதஸ்தா என்ற தலைப்பில் சில உண்மைகளை நாம் அறிவது நல்லது.
1. இது எருசலேமில் உள்ள ஒரு குளம். எருசலேம் என்பது சமாதானத்தின் நகரம். சமாதான நகரில் இரக்கத்தின் வீடு.
2. இது ஆட்டு வாசலினருகில் உள்ள குளம். ஆலயத்துக்கான ஆடுகள், மற்றுள்ள கால் நடைகளுக்கான சந்தை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வாசலினருகே இருந்த குளம். நெகேமியா 3:1.
3. ஐந்து மண்டபங்களை கொண்ட குளம். இயலாதவர்கள் தங்கும்படியாக 5 மாடிகளை கொண்ட கட்டிடம் இருந்தது.
4. வியாதஸ்தர்களை காக்க வைத்த குளம். அற்புத நிகழ்வை அனுபவிப்பதற்காக பல வியாதியஸ்தர்கள் இங்கு காணப்பட்டனர்.
5. தேவதூதனை ஈர்க்கும் குளம். இந்த குளத்தண்டையில் அடிக்கடி தேவதூதன் தோன்றுகிறவனாய் காணப்படுவதுண்டு.
6. சுகம் கொடுக்கும் குளம். கலங்கிய தண்ணீரில் இறங்கிய முதல் நபர் சுகம் பெறுகிறார்.
7. இயேசுவை ஈர்த்த குளம். தண்ணீரினால் மட்டுமல்ல, வார்த்தைகளினாலும் சுகம் உண்டு என்பதை வெளிப்படுத்த இக்குளத்தண்டை இயேசு செய்த செயல் சாட்சியாகும்.
பாரம்பரிய அனுஷ்டானங்கள் வெறுமனே தூக்கி எறியப்படத்தக்கதல்ல, அவைகளினூடேயும் தேவன் கிரியை செய்ய முடியும்.
நாம் ஒரு பெதஸ்தாவாக,
நமது சபை ஒரு பெதஸ்தாவாக,
நமது வீடு ஒரு பெதஸ்தாவாக மாறினால் தேவதூதர்களினாலேயோ, கிறிஸ்துவின் வார்த்தைகளினாலேயோ தேவன் தமது கிரியைகளை நடப்பிக்கின்றார் என்பது மெய்யாகும்.
பெதஸ்தா என்ற பெயரில் அல்ல, பெதஸ்தாவின் நிகழ்வுகளிலேயே கிறிஸ்து மகிமைப்படுகின்றார்.
பெதஸ்தாவின் பாடம்:
1. ஒருமுறை நடக்கும் நிகழ்வு.
2. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வு.
3. காத்திருப்பதில் நடக்கும் நிகழ்வு.
4. முந்தி செயல்படுவதினால் உண்டாகும் நிகழ்வு
5. உதவியற்ற நிலையில் நடக்கும் நிகழ்வு.
இரக்கத்தின் வீட்டில் இரங்குகிற தேவன் கிரியை செய்தார். ஆனால் இரங்குகிற மனிதர்கள் குறைவாய் இருந்தனர்.
கர்த்தாவே, உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை. உம் குமாரனின் மூலம் உம் இரக்கத்தை வெளிப்படுத்தினீர். ஆனால் நாங்கள் ஒருவரிலொருவர் இரக்கம் காட்டாமல் காணப்பட்டோம். இரக்கம் செய்கிறவனுக்குதான் இரக்கம் காட்டப்படும் என்ற உம் வாக்கை நம்ப நாங்களும் இரக்கமுள்ள மனிதர்களாய் எங்கள் சபையும் வீடும் இரக்கத்தின் வீடாய் காணப்பட உதவி செய்யும்.