ஸ்தாபிக்கப்பட்டது

ஒன்றான மெய்யான சபை எப்போது ஸ்தாபிக்கப்பட்டது?

சபையானது என்ன நாமத்தில் எல்லாம் அழைக்கப்பட்டது என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தத்தின்படி சபையானது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

இயேசுகிறிஸ்து தம்முடைய சபையைக்குறித்து வாக்குத்தத்தம் செய்தார்.

Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

இயேசுவை கிறிஸ்து என்று பேதுரு அறிக்கையிட்டபடியால் அந்த சபைக்கான திறவுகோல்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது.

Mat 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பாருங்கள் இயேசு கிறிஸ்துதம்முடைய சபையை கட்டுவேன் என்றார். ஆனால் அடுத்த வசனத்தில் அந்த கிறிஸ்துவின் சபையை பரலோக ராஜ்யம் என்று அழைத்தார்.

மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேமில் தொடங்கி சகல தேசத்தாருக்கும் கிறிஸ்துவின் நாமத்தினாலேஅறிவிக்கப்படும் என்று இயேசு பரமேறி போவதற்கு முன்பதாக வாக்களித்தார்.

Luk 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

Luk 24:48 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

அப்போஸ்தலர்கள் எருசலேமில் நகரத்தில் காத்திருக்கும் படியாகவும் பரிசுத்த ஆவியினால் அவர்கள் பெலடைந்து பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறும் என்றும் கிறிஸ்து முன்னுரைத்தார்.

Luk 24:49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் பெலடையும் போது சகல தேசத்தாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பார்கள் என்று கிறிஸ்து முன்னுரைத்தார்.

Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் பிதாவின் வாக்குத்தத்ததின் படி பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.

Act 2:1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

Act 2:2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

Act 2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

Act 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

கிறிஸ்துஅப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு வாக்குத்தத்தம் செய்தபடி பரலோக ராஜ்யத்திற்கான திறவுகோலை முதன் முதலாக அவருக்கு கொடுத்தார்.

அந்த பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை கொண்டு சபையில் பிரவேசிக்கத்தக்கதான முதல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.

Act 2:14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

கிறிஸ்துவின் பாடு மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலை முதன் முதலாக பிரசங்கித்தார்

Act 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

Act 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

பேதுருவின் பிரசங்கத்தை கேட்ட அநேகர் இருதயத்தில் குத்தப்பட்டார்கள்.

Act 2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

அதற்கு பேதுரு என்ன சொன்னார் என்பதையும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எப்படி எருசலேமில் தொடங்கி சகலதேசத்தாருக்கும் அறிவிக்கப்பட்டது  என்றும்தொடர்ந்து கர்த்தருக்கு சித்தமானால் பேதுருவின் சுவிசேஷ பிரசங்கத்திலிருந்துகற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME