நான் என்னுடையவைகளை அறிந்திருக்கிறேன். என்னுடையவைகளால் அறியப்பட்டிருக்கிறேன்

நான் என்னுடையவைகளை அறிந்திருக்கிறேன். என்னுடையவைகளால் அறியப்பட்டிருக்கிறேன்.

I know My sheep, and am known by My own. (John 10:15)

Jn10:27; Jn8:55; Jn17:25; Mt11:27; Lk10:21; 2Tim2:19; 1Jn3:16; Rev2:2,9,13; Rev3:1,8,15; Rev5:2-9.

நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10:15)

யோவான் 10:27; யோவான் 8:55; யோவான் 17:25; மத்தேயு 11:27; லூக்கா 10:21; 2தீமோத்தேயு 2:19; 1யோவான் 3:16; வெளி 2:2,9,13; வெளி 3:1,8,15; வெளி 5:2-9.

கிறிஸ்துவும் சீஷர்களும்.
பிதாவும்,குமாரனும் ஒருவரையொருவர் அறிந்திருந்து குமாரனானவர் பிதாவுக்கு கீழ்படிந்து அவருக்கு பிரியமானதை செய்தார். அதுபோல கிறிஸ்துவும் சீஷர்களும் ஒருவரையொருவர் அறிந்திருந்து சீஷர்கள் கிறிஸ்துவுக்கு கீழ்படிந்தும், அவருக்கு பிரியமானதை செய்தும் காணப்பட்டனர். இயேசுவோ ஜீவனைக் கொடுக்கிறவராக இருக்கிறார். பிறர் கிறிஸ்துவை அறியும்படி நாம் நமது ஜீவன், நேரம், உடமைபொருள், செல்வம் போன்றவைகளை இழக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். பவுல் தான் கிறிஸ்துவை அறியவும், பிறர் கிறிஸ்துவை அறியவும் தன் உடமைகளை இழக்கவும், செலவு செய்யபடவும் விரும்புவதாகக் கூறினார்.

சீஷர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை கிறிஸ்துவும் அறிந்திருந்தார். அவர்கள் பின்வாங்குகிறவர்களாகவும், பயம் நிறைந்தவர்களாகவும், இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தார். இறுதிகாலத்தில் தன்னோடு ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்றும் அறிந்திருந்தார். ஆனாலும் இவர்கள் மூலமாகவே தன் சரீரமாகிய சபை ஸ்தாபிக்கப்படும் என்பதையும் அறிந்திருந்தார். ஆகையினால் அவர்கள்மீது முற்றிலும் அன்பு வைக்கிறவராயிருந்தார்.

சீஷர்களும் இயேசுவை அறிந்திருந்தார்கள். தேவனிடமிருந்து வந்தவர் என்றும், தேவனுடைய விருப்பத்தையே நடைமுறைபடுத்த விரும்புகிறார் என்றும், தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்றும், உலகத்தின் மீட்புக்காக ஜீவனை கொடுக்க போகிறார் என்றும் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களால் கடிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் அவரைவிட்டு விலகிபோக விரும்பவில்லை. ஆகையினால்தான் நீங்கள் என்னோடு இருந்தவர்கள் என்று சொன்னார்.

நமக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள தொடர்பு என்ன? அவர் என்னையும் என்னுடையவைகளையும் அறிந்திருக்கிறார். என் நினைவுகளையும் செயல்களையும் அறிந்திருக்கிறார். நான் உண்மையுள்ளவனா இல்லையா என்பதையும் அறிந்திருக்கிறார். என் நற்கிரியைகளையும், துற்கிரியைகளையும் அறிந்திருக்கிறார். அவர் என்னை ஆராய்ந்து அறிந்திருப்பது போல நான் அவரை அறிந்துகொள்ள பிரயாசப்படுகிறேனா? இயேசு எனக்காய் ஜீவனை தந்தவர். என் பாவங்களை கழுவினவர். நான் வாழும்படியாய் ஆவியையும், வசனத்தையும் தந்திருப்பவர். அவருக்காய் பணிசெய்ய கட்டளையிட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
நாம் கர்த்தரை அறிகின்ற அறிவிலே வளரவே அவர் விரும்புகின்றார். இந்த அறிவு உலகமெங்கும் நிரம்பியிருக்கவும் விரும்புகிறார். அதற்காய் மீட்கப்பட்ட கூட்டமாகிய நாம் செய்வது என்ன?

அவர் என்னை அறிவார், நான் அவரை அறிவேன். நான் கிறிஸ்துவை கொண்டு தேவனை அறிகின்றேன்.

கர்த்தாவே உம்மை உம் மகன் வெளிப்படுத்தினார். நாங்கள் கிறிஸ்துவை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இதிலே நிலைக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME