பிதா என்னில் அன்பாயிருக்கிறார்

பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

My Father loves Me, because I lay down My life that I may take it again. (John 10:17)

Jn15:9,10,13; Jn17:4,5,23-26; Jn5:20; Jn13:1; 1Jn3:1; 1Jn4:8,9; Ro8:36-39; Eph3:18; 2Tim1:7; Jude1:21.

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)

யோவான் 15:9,10,13; யோவான் 17:4,5,23-26; யோவான் 5:20; யோவான் 13:1; 1யோவான் 3:1; 1யோவான் 4:8,9; ரோமர் 8:36-39; எபேசியர் 3:18; 2தீமோத்தேயு 1:7; யூதா 1:21.

என்னை நேசிக்கும் பிதா:
இவ்வசனத்தில் இரண்டு காரியங்கள் தரப்பட்டுள்ளது. கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுக்கிறார். தாமாக தம்மைக் கொடுக்கிறார். ஒருவரும் கெட்டுபோகாமல் இருக்கும்படி ஜீவனைக் கொடுக்கிறார். இரண்டாவதாக, பிதா இயேசுவை நேசிக்கிறார். பிதா தம்மை நேசிப்பதினால் தம்மை தேவகுமாரனாக பிரகடனம் செய்கிறார். அவர் தன்னை நேசிப்பதினால் மரணபரியந்தம் கீழ்படிந்து தம்மை தாழ்த்துகிறார். பிலிப்பியர் 2:8. பிதா தம்மை நேசிப்பதினால் இயேசு செய்யவேண்டிய காரியங்கள் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது. முற்றிலும் கீழ்படிய வேண்டும். எப்பொழுதும் தாழ்மையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். மரணபரியந்தம் இணக்கத்துடன் கடந்து செல்ல வேண்டும். தனது ஜீவனைக் கொடுக்க வேண்டும். தந்தையின் அன்பை தனயன் கூட்டி வழங்க வேண்டும்.

அன்பான தேவ ஜனமே பிதா நம்மை நேசிக்கிறார். இயேசு நம்மை நேசிக்கிறார் என்பது உண்மையாயின் இயேசுகிறிஸ்துவைபோல ஐந்து காரியங்களையும் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிறிஸ்துவினால் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதுபோல நம்மாலும் ஏராளமான சபைகள் ஸ்தாபிக்கப்படும்.

அன்பு சிலுவைக்கு – சிலுவையின் வேதனைக்கு – மரணத்துக்கு நம்மை கொண்டுபோனாலும் அது ஜெயித்தே தீரும். அனேகரை கொள்ளைப் பொருளாக கொண்டுவரும். அதனால்தான் இயேசு இறுதிவரையிலும் , முற்றிலும் அன்பு வைத்தார் என்று விவிலியம் கூறுகின்றது.

பிதாவின் அன்பை புரிந்துகொண்டதினால் இயேசு பிதாவுக்கு செல்லமகனாக மாறினார். நாமும் அவரின் அன்பை புரிந்துகொண்டால் உலகிற்கல்ல, உறவுகளுக்கல்ல, மாம்சத்துக்கல்ல, ஐசுவரியத்துக்கல்ல, மேன்மைக்கல்ல, அவருக்கே பிரியமான பிள்ளைகளாகவும், நேசகுமாரனாகவும் மாறுவோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்.

கர்த்தாவே நீர் உம் மகன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர் என்று நாங்கள் அறிந்து அதே அன்பை நாங்களும் பெற்றிட இயேசுவைபோல நடந்துகொள்ள உம் ஆவியைக் கொண்டு போதித்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME