என் ஆடுகள் என் சத்தம் கேட்டு எனக்குப் பின்செல்லுகிறது

என் ஆடுகள் என் சத்தம் கேட்டு எனக்குப் பின்செல்லுகிறது

My sheep hear My voice, and I know them, and they follow Me. (John10:27)

Jn10:4; Jn8:12; Jn12:26; Jn21:22; Mt16:24; Mk8:34; Mk10:21; Lk9:23; Rev14:4; 1Kin18:21; Jos24:15.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (யோவான் 10:27)

யோவான் 10:4; யோவான் 8:12; யோவான் 12:26; யோவான் 21:22; மத்தேயு 16:24; மாற்கு 8:34; மாற்கு 10:21; லூக்கா 9:23; வெளி 14:4; 1இராஜாக்கள் 18:21; யோசுவா 24:15.

பின் செல்லும் ஆடுகள்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடையவர்களைப் பார்த்து என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்டு அதற்கு செவிகொடுக்கிறது என்றும், அந்த ஆடுகள் என்னால் அறியப்பட்டவைகள் என்றும், இந்த ஆடுகள் எனக்கு பின்செல்லுகிறது என்றும் விளக்கமாகக் கூறுகின்றார்.
பின்செல்லும் ஆடுகள் இயேசுவின் குரலைக் கேட்கும் திறனைப் பெற்றிருக்கும். செவிகொடுத்து கீழ்படிய பழக்கப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்துவால் தன்னை முற்றிலும் அறியப்படும்படியாய் அவரோடு நெருங்கி பழகியிருக்கும். இவைகளே அவருக்கு பின்செல்லுகிறது.

இயேசுவின் குரலைக் கேட்கும் திறன் அற்றவனும், அவருக்கு செவிகொடாதவனும் அவரில் நிலைத்திருக்கும்படியாயும் கனி கொடுக்கும்படியாயும் அவரை பின்பற்றவியலாது. பயத்தினாலும், திகிலினாலும், குறைவுகளினாலும், பலவீனத்தினாலும், ஐசுவரிய மயக்கத்தினாலும் இயேசுவை விட்டு ஓடிப்போகும்.
பின்செல்லும் ஆடுகள் குறித்த இரு விஜயங்களை நாம் இங்கே சற்று விளக்கமாகக் கவனிப்போம்.

பின்செல்லும் ஆடுகள் அவருக்கு செவிகொடுக்கிறது. கவனமாக செவிகொடுக்கிறது. ஆர்வத்துடன் செவிகொடுக்கிறது. கீழ்படியும்படி செவிகொடுக்கிறது. பெற்றுக்கொள்ளும்படி செவிகொடுக்கிறது. மனமும், சிந்தையும், இருதயமும், கண்களும், செவியும், வாயும் இணைந்ததுவே செவிகொடுத்தல். உண்மையான செவிகொடுத்தலே உண்மையான சீஷத்துவம்.

பின்செல்லும் ஆடுகள் இயேசுவால் அறியப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்து முகத்தை பார்க்கிறவரல்ல, இருதயத்தையும் அதன் நினைவுகளையும் பார்க்கிறவர். ஆடுகளை அறிந்திருக்கிறார். ஆடுகளின் தன்மைகளை அறிந்திருக்கிறார். ஆடுகளின் நிலைமையை அறிந்திருக்கிறார். தன்னால் அறியப்பட்டவைகளே தன்னை அறியும் திறன் பெற்றிருக்கும். பொய் சொல்லவோ, மாய்மாலமாகவோ, விளையாட்டாகவோ அவரை பின்பற்ற இயலாது. அவர் எல்லாவற்றையும் அறிகிறவர்.

இன்றைக்கு அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு பிரியமில்லாதவைகளை ஆவலுடன் செய்துக்கொண்டிருக்கும் அன்பர்களுடன் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எனவே நாம் அவரை மட்டுமே நோக்கிப்பார்த்து முன்னேறுவோம்.
நன்றாக பின்பற்று உண்மையாகவே கை கொடுப்பார்.

கர்த்தாவே உம்மை முழு இருதயத்தோடும் பின்பற்றும் உண்மையுள்ள இருதயமுள்ளவர்களாக இருக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME