நீரூற்றாயிருக்கும்

நான் கொடுக்கும் நீர் அவனுக்குள் ஊறும் ஜீவஊற்று.

water I shall give him will become in him a fountain of water springing up into everlasting life. (John 4:14b)
Jn7:38,39; Jn10:10; Jn14:16-19; Ro5:21; Ro8:16,17; 2Co1:21,22; Eph1:13,14; Eph4:30; 1Pet1:22; 1Jn5:20.

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:14)

யோவான் 7:38,39; யோவான் 10:10; யோவான் 14:16-19; ரோமர் 5:21; ரோமர் 8:16,17; 2கொரிந்தியர் 1:21,22; எபேசியர் 1:13,14; எபேசியர் 4:30; 1 பேதுரு 1:22; 1 யோவான் 5:20.

உள்ளத்தில் ஊறும் நீர்:

இங்கே நீர் என்பதை 4 விஜயங்களை கொண்டு விளக்குகின்றேன்.
தலையிலிருந்து உண்டாகும் நீர் உண்டு. அதைபற்றி இங்கே நாம் தியானிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மீட்கபட்ட – மாற்றம் பெற்ற இருதயத்திலிருந்து ஊறும் நீரை கவனிப்போம்.

1. ஆவியின் அனுபவங்கள்.
பரிசுத்த ஆவியானவர் ஒருவரின் இருதயத்தை தனக்குள் கொண்டுவரும்போது ஆவியின் கிரியைகள், வரங்கள், முடிவாக கனிகள் என்ற தன்மைகள் வெளிப்படும்.
கிரியைகளும், வரங்களுமல்ல, கனிகளே ஒருவரின் ஆவிக்குரிய முதிர்ச்சியை கணக்கிடக்கூடியது.

2. Compassionate Mind. மனதுருக்கம்.
இருதயம் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டபின்பு அவனிலிருந்து மனதுருக்கத்தின் நீர் சுரக்கும். இந்த நீரே அவனை நற்கிரியைகளை செய்ய தூண்டுகின்றது. நற்கிரியைகள் என்பது நான் விரும்புவதினால் செய்வதல்ல, அவர் விரும்புவதினால் செய்வது. அழியும் ஆன்மாவுக்காக, நலிவுறும் குடும்பங்களுக்காக, துயரப்படும் மனிதர்களுக்காக, கைவிடப்பட்ட வயோதிபர்களுக்காக, பாவம் – அக்கிரமம் – வன்முறை நடப்பித்து தங்களை தாங்களே அழித்துக்கொள்பவர்களுக்காக, தூய்மைகேடான பாவங்களை செய்து தேவ கோபாக்கினைக்குள்ளாகும் மனிதர்களுக்காக, அந்நியதெய்வங்களை வணங்கி அக்கினிக்கு இரையாகப்போகும் பட்டணங்களுக்காக மனதுருக்கம் உண்டாகும்.

3. ஞானம், புத்தி, அறிவு.
தலையிலிருந்து வரும் அறிவல்ல, ஏட்டைபடிப்பதினால் வரும் ஏட்டறிவல்ல,
பட்டு அறியும் பட்டறிவல்ல, இது உள்ளத்திலிருந்து ஊறும் உயர் அறிவு, உன்னதரை அறியும் அறிவு. அது பரலோகத்திலிருந்து வரும் ஞானம்.
எவரில் தேவ ஆவி உள்ளாரோ அங்கே அவரில் இந்த ஞானம் சுரந்து வரும். இந்த ஞானம் உன்னை ஞானியாக்கும்.

4. வசனங்கள். பரிசுத்த ஆவி நிரம்பிய உள்ளத்திலிருந்து நல் ஆலோசனைகள், கர்த்தருடைய வார்த்தைகளை பயன்படுத்தும் யுத்தி, வசனங்கள் நினைப்பூட்டப்பட்டு வெளியே உரைக்கப்படுதல் ஆகியவை உண்டாகும். Preaching, Teaching, Writting வெளிப்படும்.
உள்ளத்தில் இருந்தால் தான் உதட்டில் சொட்டும். நாவரங்கள் உள்ளத்தில் வசனங்கள் வேரூன்றப்பட்டு பரிசுத்த ஆவியினாலே தெரிந்துகொள்ளப்பட்டு வெளியே அனுப்பப்படுவதாகும்.

கர்த்தாவே, எங்கள் உள்ளத்தில் உம் ஆவியை ஊற்றி ஆவியின் அனுபவங்கள், நற்கிரியைகள், ஞானம், கர்த்தருடைய வாக்குகளை எங்களிலிருந்து வெளிபடுத்தி உம் நாமத்தை மகிமைபடுத்தி கொள்வதற்காக நன்றி. எங்களைபோல இன்னும் அனேகரை எங்களை விடவும் மேன்மையானவர்களாக உருவாக்கும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME