உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது.
But it hates Me because I testify of it that its works are evil. (John 7:7)
Jn3:19; Jn15:18,19; Lk11:39-54; Act5:28-33; Act7:51-54;’ Rom8:7; Gal4:16; 1Jn3:12,13; Rev11:5-11.
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
(யோவான் 7:7)
யோவான் 3:19; யோவான் 15:18,19; லூக்கா 11:39-54; அப்போஸ்தலர் 5:28-33; அப்போஸ்தலர் 7:51-54; ரோமர் 8:7; கலாத்தியர் 4:16; 1யோவான் 3:12,13; வெளி 11:5-11.
பொல்லாத கிரியைகள்:
உலகமும் அதிலுள்ளவைகளும் தேவனால் உண்டாயிற்று என்பது தேவனுடைய வார்த்தை. உண்டாக்கப்பட்டவைகள் யாவும் நல்லதாகவே இருந்தது என்பது தேவனுடைய சாட்சி.
ஆனால் இயேசுகிறிஸ்துவோ உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது என்றார்.
எப்படி இந்த மாற்றம் உண்டானது?. நல்லதாக உருவாக்கப்பட்ட உலகத்தை மனுக்குலம் பற்பலவிதமான உபாயங்கள் செய்து கெடுத்துவிட்டது. உபாயங்கள் யாவும் சாத்தானால் உருவாயிற்று என்பது நமது நம்பிக்கை. சாத்தானுடைய ஆலோசனைக்கு உட்பட்ட உலகம் தற்சமயம் முழுவதுமாய் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது.
பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கும் முழு உலகையும் தேவன் இயேசுகிறிஸ்து மூலமாய் நியாயதீர்ப்புக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். நியாயாதீர்ப்பின் விவரமாவது முழு உலகமும் ஆக்கினைக்கு உட்படுத்தப்படும் என்பதாகும். உலகத்தின் கிரியைகள் 5 விதங்களில் பொல்லாங்கானவைகளாய் மாறுகின்றது.
- பாவத்தினால் உலகின் கிரியைகள் பொல்லாதவைகளாய் மாறுகின்றது.
- சாத்தானால் , சாத்தானின் நேரடி கிரியைகள் மூலம் உலகின் கிரியைகள் பொல்லாதவைகளாய் மாறுகின்றது.
- சாத்தானின் ஆவியை உடையவர்களால் உலகின் கிரியைகள் பொல்லாதவைகளாய் மாறுகின்றது.
- மனுஷனால், அதாவது மனுஷ புத்தியினால், மனுஷ பலத்தினால் , மனுஷ முயற்சிகளால் உலகின் கிரியைகள் பொல்லாதவைகளாய் மாறுகின்றது.
- மனுஷனால் உண்டாக்கப்படும் புது புது படைப்புகளினால் உலகின் கிரியைகள் பொல்லாதவைகளாய் மாறுகின்றது.
அன்பானவர்களே கர்த்தரை நமது உள்ளங்களில் பரிசுத்தம் செய்வோம். உலக வழியைவிட்டு மெய்வழி நடப்போம்.
கர்த்தாவே, உம் மகன் மூலம் கெட்டுபோன உலகில் நற்கிரியைகளை உண்டுபண்ணி முழு உலகையும் தூய்மைபடுத்த சபையாக எங்களை ஏற்படுத்தியுள்ளீர். உமது ஆவியை அளவில்லாமல் தந்து எங்களுக்கு உதவிடும்.