வெளிப்படுத்தும்

நீர் இப்படிபட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும்.

If You do these things, show Yourself to the world. (John 7:4)

1Kin22:13; Pro18:1,2; Mt4:6; Mt6:1,2,5,16; Mt23:5; Lk4:23; Lk6:45; Jn6:15; Jn11:54; Act2:4-12.

பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய மாட்டான், நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். (யோவான் 7:4

1 இராஜாக்கள் 22:13; நீதிமொழிகள் 18:1,2; மத்தேயு 4:6; மத்தேயு 6:1,2,5,16; மத்தேயு 23:5; லூக்கா 4:23; லூக்கா 6:45; யோவான் 6:15; யோவான் 11:54; அப்போஸ்தலர் 2:4-12.

வெளிபடுத்தும் நிகழ்வுகள்:

இயேசுகிறிஸ்துவின் ஊழியம், வாழ்க்கையில் இரு வேறு காரியங்கள் ஒன்றோடொன்று சம்பந்தமில்லாததுபோல காணப்படும். சில நேரங்களில் இயேசு மறைந்து வாழ்ந்தார், மறைந்து பணி செய்தார். சில நேரங்களில் இயேசு வெளியரங்கமாக வாழ்ந்து, பணி செய்தார். அதைபோலவே கிறிஸ்தவ வாழ்க்கையிலும் மறைவாக வாழவேண்டிய, வைக்க வேண்டிய, செய்ய வேண்டியவைகள் உண்டு. வெளியரங்கமாய் செய்ய வேண்டியவைகளும் உண்டு.

இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களின் கூற்றானது இருவிதங்களில் வியாக்கியானபடுத்தவியலும்.

  • ஏளன கூற்று. வீட்டுக்குள் செய்தால் உமக்கு பேர் கிடைக்காது. வெளியேபோய் வெளியரங்கமாய் செய். ஏனெனில் வேதபாரகரும், பரிசேயரும் இவ்வாறுதான் செய்கிறார்கள்.
  • ஆச்சரிய கூற்று. நீர் செய்கிறவைகள் மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. எங்களாலேயே நம்பமுடியவில்லையே. உமக்கும் எங்களுக்கும் பேர்கிடைக்கும்படிக்கு வெளியேபோய் இவைகளை செய்வது நலமாயிருக்கும்.

தேவனுடைய கிரியைகளும், உபதேசங்களும் மறைவாய் உருவாகி, திரையில் தெளிவாகும் தன்மை கொண்டது.
அறைவீட்டில் உருவாக்கபடாமல் பறை அறிவிக்க முடியாது.

தேவனுடைய கிரியைகள், உபதேசங்கள் பேர் பிரஸ்தாபத்துக்கோ, கூட்டம் சேர்ப்பதற்காகவோ அல்ல, ஆத்துமாக்கள் இரட்சிக்கபடுவதற்காகவே.

குடும்ப மீட்பே வெளிஉலக மீட்புக்கு அச்சாணியாயிருக்கிறது. ஊழியனின் குடும்பம் முழுவதுமாய் மீட்கபட்டிருக்குமானால் ஊழியத்தில் அது பிரசித்தமாகும்.

இயேசுவின் குடும்பம் அப்பொழுது இல்லாவிட்டாலும் ஆதிசபையில் மிகப்பெரிய பங்காற்றியது என்பதை மறுக்கவியலாது.

கிறிஸ்துவில் தேவன் இருக்கிறார் என்பதுவே கிரியைகள்.

கர்த்தாவே, உம் மகன்மூலம் நற்கிரியைகளை செய்து உம் நாமத்தை மகிமைபடுத்த விரும்புகிறீர். இந்த மகிமையை நாங்கள் எடுத்துகொள்ளாமல் உமக்காய் சிறப்பான பணிகளை செய்ய எங்களுக்கு பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME