உங்களில் பாவமில்லாதவன் கல்லெறியுங்கள்.
He who is without sin among you, let him throw a stone at her first. (John 8:7)
Deu13:9; Deu17:6; Ps50:16-21; Ps130:3; Pr12:18;Pr26:4,5; Ecc7:21,22; Eze23:45; Mt7:1-5; Mt19:20; Mt23:25-28; Jn7:46; 1Co14:24,25; Col4:6; Heb4:12,13; Rev19:15.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, (யோவான் 8:7)
உபாாகமம் 13:9; உபாகமம் 17:6; சங்கீதம் 50:16-21; சங்கீதம் 130:3; நீதிமொழிகள் 12:18; நீதிமொழிகள் 26:4,5; பிரசங்கி 7:21,22; எசேக்கியேல் 23:45; மத்தேயு 7:1-5; மத்தேயு 19:20; மத்தேயு 23:25-28; யோவா 7:46; 1கொரிந்தியர் 14:24,25; கொலோசெயர் 4:6; எபிரெயர் 4:12,13; வெளி 19:15.
பாவமில்லாதவர்:
ஜனங்களின் ஆரவார பேச்சுக்கள் மத்தியில் இயேசுகிறிஸ்து அமைதியாக குனிந்து தரையிலே எழுதிகொண்டிருந்தார். என்ன எழுதினார் என்று நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனால் ஜனங்களின் குமுறல்களையும், குற்றசாட்டுகளையும், ஆத்திரத்தையும் கவனிக்க விருப்பமில்லாது தரையிலே எழுதிகொண்டிருந்தார்.
நமது வாக்குவாதங்களையும், கலகங்களையும், ஆத்திரத்தையும் அவர் கவனிப்பதில்லை. சந்தடிமிக்க இரைச்சல்களுக்கு அவர் செவி சாய்ப்பதில்லை.
விடாபிடியாக அவரை கேட்டுகொண்டிருந்ததினால் தன் கவனத்தையும், கோபத்தையும், நீதியையும் வெளிபடுத்தும்படியாக உங்களில் எவன் ஒருவன் பாவம் இல்லாதிருக்கிறானோ அவன் முதல் கல்லை எறியக்கடவன் என்றார்.
இயேசு சுட்டிகாட்டிய ஒரு உண்மை என்னவெனில் , குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை குற்றம் சுமத்தி நியாயம் விசாரிக்கதக்க குற்றமில்லாதவன் என்னைதவிர உங்களில் யார் உண்டு என்பதை இங்கே நிரூபியுங்கள் என்று வெளிபடுத்தினார்.
குற்றம்சாட்டப்பட்டவள் உண்மை குற்றவாளிதான், தண்டனைக்குரியவள்தான், கல்லெறியபபடவேண்டியவள்தான். ஆனால் கிருபையும் சத்தியமும் இணைந்தவரராய் வந்திருப்பதினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவளுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்ற அணுகுமுறையில்தான் உங்களில் பாவமில்லாதவன் என்று யாரையும் காயபடுத்தாமல் தெளிவாக கூறினார்.
பாவமில்லாதவனை ஆண்டவர் தேடினார். கிடைக்கவில்லை என்பதினாலேயே தாமே பாவமில்லாதவராக இதே மானுட தன்மையில் பூமிக்கு வந்தார்.
தமது பாவமில்லாத தன்மையை மனுக்குலத்திற்கு கொடுப்பதற்காகவே தம்மை பலியாக சிலுவைக்கு ஒப்புகொடுத்தார். அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு தேவனுடைய ஆவியை பெற்றிருக்கிற எவரும் பாவமில்லாதவராகவே கருதப்படுகிறார். அதனால்தான் அவர்களை தம் பிள்ளைகளாக நினைத்து ஆசீர்வதிக்கிறார்.
எனவே நாம் பாவமில்லாத தன்மையை விட்டுவிலகி பாவகிரியைகளில் ஈடுபடாமல் பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படவேண்டும்.
நாம் பாவமில்லாது வாழ்வதற்காகவே நம்மில் தமது ஆவியையும், வசனத்தையும் தந்துள்ளார்.
இதை மறவாதீர்.
பாவமில்லாதிருப்பீர்.
பரிசுத்தரை கொண்டிருப்பீர்.
கர்த்தாவே உம் குமாரன்மூலமாக எங்களை தூய்மையாக்கி தூய்மைகேடு நிறைந்த உலகை தூய்மைபடுத்த விரும்புகிறீர். எங்களை பயன்படுத்தும்.