உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்.
when you are old, you will stretch out your hands, and another will gird you and carry you where you do not wish. (John 21:18)
John 13:36; John 12:27,28; Acts 12:1-4; Acts 21:11; 2 Corinthians 5:4; 2 Peter 1:11-15.
நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய், நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 21:18)
யோவான் 13:36; யோவான் 12:27,28; அப்போஸ்தலர் 12:1-4;21:11; 2கொரிந்தியர் :4; 2பேதுரு 1:11-15.
அறியாத இடம்.
கிறிஸ்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பருவங்கள் குறித்து இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். குறிப்பாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இதுவாகும். ஒன்று தன்னிஷ்டப்படி ஓடுகிற பருவம், இன்னொன்று தனக்கிஷ்டமில்லாத இடத்திற்கு ஓட்டப்படுகிற காலம். ஒன்று தன்னில்தானேயும் தன்னைதானேயும் இயக்குகிற பருவம். இன்னொன்று பிறிதொருவரால், விரும்பதகாத ஒருவரால் இயக்கப்படுகிற காலம். இயேசு கிறிஸ்துவின் பிரதான ஊழியனாகிய பேதுரு தனது வாலிப காலத்தில் தன் மனம் விரும்புகிற படியும், தனக்கிஷ்டமான படியும் வாழ்ந்தார். எதை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தாரோ அதை செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தார். ஆனால் இனியொரு காலம் வரப்போகின்றது. அது உனக்கு விருப்பமில்லாததும், நீ அனுபவிக்க விரும்பாததுமான கொடுமையான காலம். அங்கே உனக்கிஷ்டமில்லாதவைகளை உனக்கு செய்வார்கள் என்று கூறுகின்றார் இயேசு.
உன் துடுக்குதனத்தாலும், உன் மனதைரியத்தாலும் வாயில் வந்ததையெல்லாம், மனதில் பட்டதையெல்லாம் செய்தாய். நான் எவ்வளவு சொல்லியும் நீ கேட்டப்பாடில்லை. ஒரு நேரம் நன்றாயிருக்கின்றாய், மறு நேரம் சாத்தானுக்கு இடம் கொடுக்கின்றாய். இப்பொழுது நான் உன்னை விட்டு போகிறேன். இனி நான் உன்னோடிரேன். நீயும் நானும் விரும்பாத ஒரு கொடுமையான உபத்திரவ காலம் வரப்போகின்றது. அப்பொழுது உன்னை நீயே மேய்த்துக் கொள்ள இயலாது. உன்னை உன்னால் கட்டுபடுத்த இயலாது. உன் பலம் குன்றி, உன் முயற்சிகள் தோல்வியடையும். நான் கடந்துபோகும் இந்த பாதையில் நீயும் வருவாய். உன்னை கட்டி உனக்கு விருப்பமில்லாததும் எனது மரணத்தை நீ கடிந்துகொண்டாயே அதே மரணத்தையும் நீ அனுபவிப்பாய் என்று இயேசு கூறுகின்றார்.
கர்த்தருடைய பணியும், கர்த்தரை பின்பற்றுதலும் எளிதானதும், கவர்ச்சிக்குரியதுமான வாழ்க்கை முறையல்ல. காலங்கள் செல்ல செல்ல உண்மை சுவிசேஷம் உருமாறி போனாலும் விவிலியம் கூறும் சுவிசேஷம் ஒருபோதும் மாறுவதில்லை. அதன்மூலமாகவே ஆதி சபையார் கடந்து சென்றனர். மீதி சபையாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்து சென்றுதானாக வேண்டும். சுவிசேஷமானது இரத்தத்தோடு சம்பந்தபட்டதாகும். ப. ஏ ல் பாவங்கள் மன்னிக்கப்பட இரத்தம் தேவைபட்டது. பு.ஏ ல் இரட்சிப்படைய இயேசு இரத்தம் சிந்தினார். அவர் துவங்கி வைத்த இந்த திருப்பணி காலம் காலமாக தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். நாம் விரும்பினாலும் அல்லாவிட்டாலும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். சுவிசேஷ சாரம் மறையும்போது சபையை உபத்திரவபடுத்த ஒரு கூட்டத்தை காலம் காலமாக தேவன் ஆயத்தபடுத்தியுள்ளார்.
திருச்சபையானது ஐசுவரியத்திலும், உலகத்திலும் , இன்பங்களிலும் மயங்கிப்போகும்போது விழிப்புணர்வு உண்டாகும்படியாகவும், கொழுப்பை அகற்றும்படியாகவும் உபத்திரவங்களை கட்டவிழ்த்து விடுகிறார். தனக்கு தரப்பட்டுள்ள காலம் வரையிலும் அவைகள் தங்கள் பணியை செய்யும். சபை விழிப்படைந்து தேவனுக்குள் – கிறிஸ்துவுக்குள் மறைந்துக் கொள்ள ஆரம்பிக்கும்போது உபத்திரவபடுத்தியவர்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
அல்லேலூயா!!!.
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1பேதுரு 4:12-19.