யூதர்கள்

இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது.

for salvation is from the Jews. (John 4:22b)
Gen49:10; Ps68:20; Isa2:3; Isa12:2,6; Isa46:13; Zep3:16,17; Zec9:9; Lk24:47; Act13:46-48; Act17:23; Ro9:4,5; Ro11:11,12,31; Eph2:12,13; Heb7:14.

நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
(யோவான் 4:22)

ஆதியாகமம் 49:10; சங்கீதம் 68:20; ஏசாயா 2:3; ஏசாயா 12:2,6; ஏசாயா 46:13; செப்பனியா 3:16,17; சகரியா 9:9; லூக்கா 24:47; அப்போஸ்தலர் 13:46-48; அப்போஸ்தலர் 17:23; ரோமர் 9:4,5; ரோமர் 11:11,12,31; எபேசியர் 2:12,13; எபிரெயர் 7:14.

இரட்சிப்பு உண்டாகும் வழி:

1. இரட்சிப்பு தேவனிடமிருந்து உண்டானது.
2. இரட்சிப்பு பழைய ஏற்பாட்டில் பலிகளினால் கிடைத்தது.
3. இரட்சிப்பு இயேசுவிலிருந்து உண்டாகிறது.
4. இரட்சிப்பு வருகிற பாதை..
– விவிலியம்.
– இஸ்ராயேல் ஜனங்கள் (யூதா கோத்திரம்).
5. இரட்சிப்பை இறுதிவரையிலும் காத்துக்கொள்ளவேண்டியது நாமே.
6. இரட்சிப்பு தேவனில்தான் இறுதி பெறும்.

இவற்றில் இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது என்பதை மட்டும் கவனிக்கலாம்.

– இஸ்ராயேலர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம்.
– அவர்கள் நியாயபிரமாணத்தின் மக்கள். எனவே பரிசுத்தமுள்ள ஜாதியார்.
– இயேசுகிறிஸ்துவை பிறப்பித்தவர்கள் அவர்களே. அதாவது இயேசு அவர்களிலேதான் தோன்றினார். எந்த சித்தர்களோ, ரிஷிகளோ, வேத ஏடுகளோ அவரை அறிந்திருக்கவில்லை.
– இயேசுகிறிஸ்துவை இரத்தம் சிந்த வைத்ததும் நியாயபிரமாணத்தின் மக்களே.
– இயேசு சிந்திய இரத்தம் இஸ்ராயேல் மண்ணாகிய பரிசுத்த பூமியிலே.
– இஸ்ராயேலர் இரட்சிப்பை – இயேசுவை நிராகரித்ததினால்தான் புறஜாதியாராகிய நமக்கு இரட்சிப்பு கிடைத்தது.

இரட்சிப்பு யூதர்கள் வழியாக இயேசுவில் உண்டானது.
இயேசுகிறிஸ்து நியாயபிரமாணத்தின் மகன்.
நியாயபிரமாணம் அவரில் நிறைவு பெற்றதினால்தான் இரட்சிப்பு உண்டானது.

இரட்சிப்பை தேடி அலையும் மாமனிதர்களே!
– நீங்கள் மலைகளுக்கு போனாலும், நீரிடங்களுக்கு போனாலும், புண்ணிய இடங்களுக்கு போனாலும் இரட்சிப்பு கிடைக்காது.
– நிஷ்டையில் ஆழ்ந்தாலும், யாகங்கள் வளர்த்தாலும், பூஜை பரிவர்த்தனங்கள் செய்தாலும், மந்திரங்கள் உச்சரித்தாலும், சன்னியாசியானாலும் இரட்சிப்பு கிடைக்காது.
– தானதர்மங்கள் செய்தாலும், உடலை சுட கொடுத்தாலும், கர்ம காரியங்கள் செய்தாலும், வேறு எந்த முறையிலும் இரட்சிப்பு கிடைக்காது.

இயேசு சொன்னார்: இரட்சிப்பு என் இனத்தார் மூலம் என்னில் மட்டுமே கிடைக்கும்.

இயேசுவை தேடி வா. வீசும் தென்றலையும் தாண்டி,
எதிர்க்கும் பேரலைகளையும் தாண்டி, பயமுறுத்தும் பாரம்பரியங்களையும் விட்டுவிட்டு இயேசுவை தேடி வா.

அவர் உன்னை அன்போடு அழைக்கிறார். உன்னை ஏற்று கொள்வார். வெறுத்துவிடாதே, விட்டு விடாதே, காலம் முடிய போகிறது. அவர் பாதம் வருவாயா?

கர்த்தாவே, உம்மில் நாங்கள் பெற்ற இரட்சிப்பானது முன்னோர்களாகிய இஸ்ராயேலரின் வழியில் கிடைத்ததினால் அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். நாங்கள் பவுலோடு இணைந்து நின்று, முழங்கால்களை ஊன்றி இஸ்ராயேலர் இரட்சிக்கபட வேண்டும் என்று கதறுகின்றோம். அவர்களை இரட்சியும். அவர்களை சிட்சியாதேயும். எங்கள் இனத்தாரும் மீட்கபட எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME