இயேசுவை நம் வீட்டுக்கு அழைக்க வேண்டும்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். (யோவான் 4:47)
ஏன் நாம் அவரை அழைக்க வேண்டும்?
1. அவர்தான் குடும்பத்தை ஏற்படுத்தினவர். ஆதியாகமம் 2:18-24.
வீட்டை உண்டுபண்ணினவர் தேவன். எபிரெயர் 3:4. சங்கீதம் 127:1.
கணவன் – மனைவியை இணைத்தவர் அவர்.
பிள்ளைகளை தருபவர் அவரே. குடும்பத்துக்கு தலை அவர்தான். அவரின் இடத்தில் தேவன் கணவனை வைத்துள்ளார். அவனே வீட்டுக்கு தலைவன். எபேசியர் 5:23
1தீமோ3:5,12. அவன் வீட்டை நன்றாக நடத்த வேண்டும்.
வீட்டை பரிதீலிக்க மனைவியை வைத்துள்ளார். ஆதியாகமம் 2:18, நீதிமொழிகள் 31:10. பிள்ளைகள் வீட்டை அழகுபடுத்துகிறார்கள்.
அவரே வீட்டை கண்காணிக்கின்றவர். எபேசியர் 5:23.
குடும்பத்தை ( திருமணத்தை) ஏற்படுத்தியதின் நோக்கம் :
பக்தியுள்ள பிள்ளைகளை பெற்றெடுக்க, பூமியை தேவ குடும்பங்களால் நிரப்ப.
விவிலியம் காதல் திருமணங்களை ஆமோதிக்கவில்லை.
தேவனே ஏற்படுத்துகிறார்,
தேவன் தாய்-தகப்பனுக்கு அவ்வுரிமையை தந்துள்ளார்.
அவர்களின் முடிவே இறுதியானது.
தாய் குடும்பத்திலிருந்து ஆசீர்வாதம் புது குடும்பத்துக்கு வரவேண்டுமானால் அவர்கள் (பெற்றோர்கள்)தான் குடும்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
2. அவரே குடும்பத்தை ஆசீர்வதிக்கிறார். ஆதியாகமம் 1:27,28.
தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
புருஷன் (தகப்பன்) ஆசீர்வதிக்கபட்டவன். எப்படி?
தாய் குடும்ப தலையே ஆசீரை புது தலைக்கு கொடுக்கும்.
குடும்ப விசுவாசமே குடும்ப ஆசீருக்கு வழி.
குடும்ப தலைவரின் விசுவாசம் அவசியம். ஆதாம் தேவனோடுள்ள தொடர்பை இழந்தான். குடும்பம் சபிக்கப்பட்டது. ஆபிரகாம் தேவனோடுள்ள தொடர்பை ஏற்படுத்தினான். அவன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.
புருஷன் பெற்ற ஆசீர்வாதத்திற்கு ஏற்றப்படி மனைவி குணசாலியாய் நடக்க வேண்டும். மனைவியானவள் ஆசீர்வாதத்தை விரிவாக்குகிறவள்.
அவள் கவனமாக இல்லையெனில் குடும்பம் அவ்வளவுதான்.
வரவு, செலவு போன்றவைகளில் கவனம் தேவை.
குடும்பம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனிப்பவளே மனைவி.
பிள்ளைகள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கிறவர்கள். சங்கீதம் 127:4.
தேவனிடமிருந்து வரும் ஆசீர் புருஷன் வழியாக அடுத்த சந்ததிக்கு போகும்.
அது போகும் இடமெங்கும் வளம் பெற்றோங்கும். அதுவே Blessed Home.
குடும்பமாய் இரட்சிக்கப்பட்டும் ஆசீர்வதிக்கப்படாததற்கு காரணம்
– தலை சிக்கனம் இல்லை, ஊதாரித்தனம்.
– தன் குடும்பத்தை செம்மையாய் நடத்தவில்லை.
– தேவனோடு நல்ல உறவு இல்லை.
3. அவரே குடும்பத்தை பாதுக்காக்கிறார். சங்கீதம் 91:10
ஏன் பாதுகாப்பு அவசியம்?
– ஆதி குடும்பத்தை வஞ்சித்த பிசாசு இன்னும் சுற்றி வருகிறான்.1தீமோத்தேயு 2:14. 1 பேதுரு 5:8.
– மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறாள். 1 பேதுரு 3:7.
– பிள்ளைகளின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும். நீதிமொழிகள் 22:15.
குடும்ப விருத்தியின் அடையாளம் பிள்ளைகளே.
பிள்ளைகள் காக்கப்பட்டால்தான் குடும்ப விருத்தியுண்டாகும்.
அதனால்தான் பக்தியுள்ள பிள்ளைகளின் தேவையை விவிலியம் கூறுகின்றது. மல்கியா 2:15.
– வாதை கூடாரத்தை தாக்கும். சங்கீதம் 91:10. எகிப்தின் 10 வாதைகளும் ஒரு உதாரணம்.
வாதை நம் கூடாரத்தை அணுகாமலிருக்க சங்கீதம் 91:1, சகரியா 14:8, 2நாளாகமம் 21:13,14 அவசியம்.
ஆம் கர்த்தாவை நம் வீட்டுக்கு அழைப்போம்.
ஜெபம். எங்களை குடும்பமாக இரட்சித்தீர். உமக்கு பக்தியுள்ள சந்ததியை பெற்றெடுத்து வளர்க்கவும், அவர்களைகொண்டு கெட்டுபோன பூமியை நிரப்பவும் விரும்புகிறீர். நாங்கள் உம் ஆலோசனையை பெற்று உம் வழியிலே எங்கள் குடும்பத்தை நடத்த எங்களுக்கு உதவி செய்யும்.