ஆவியாயிருக்கின்ற தேவன்
God is Spirit. (John 4:24)
Gen1:2; Gen41:38; Ex31:5; Ex35:33; Nu24:2; 1Sam10:10; 1Sam11:6; Sam19:20,23; 2Chr15:1; 2Cor24:20; Job33:4; Ps143:10; Isa42:5; Isa61:1; Eze11:24; Dan5:11.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:24)
ஆதியாகமம் 1:2; ஆதியாகமம் 41:38; யாத்திராகமம் 31:5; யாத்திராகமம் 35:33; எண்ணாகமம் 24:2; 1 சாமுவேல் 10:10; 1 சாமுவேல் 11:6; 1 சாமுவேல் 19:20,23; 2நாளாகமம் 15:1; 2 நாளாகமம் 24:20; யோபு 33:4; சங்கீதம் 143:10; ஏசாயா 42:5; ஏசாயா 61:1; எசேக்கியா ல் 11:24; தானியேல் 5:11.
ஆவியான தேவன்: யூதம், கிறிஸ்தவத்தின் இறையியல் அடித்தளமே தேவன் ஆவியாயிருக்கிறார் என்பதாகும்.
இங்கே நாம் 4 விஷயங்களை அறிய வேண்டும்.
1. மற்ற மதங்களைப்போல மனித ஞானம் கொண்டு அவரை வரையறுக்க இயலாது.
2. உலகியல் நடைமுறைகளை கொண்டு அவரை கட்டுப்படுத்த முடியாது.
3. அதீத நாகரீக வளர்ச்சிகள் யாவும், கண்டுபிடிப்புகள் யாவும் அவர் முன்னிலையில் குப்பையாகவே நினைவு கூரப்பட்டுள்ளது.
4. மனுக்குலம் தேவனோடு வாதாடி, மல்லுகட்டி சாதிக்க முடியாது.
காரணம் அவர் நமது Intention ஐ அறிகின்றார்.
ஆவியாயிருக்கிற தேவன் செய்கின்ற சில காரியங்களை கவனிப்போம்.
1. படைத்தார் – படைக்கிறார் – படைப்பார். இந்த சிருஷ்டிப்பின் இரகசியங்களை பரிசுத்த ஆவியை கொண்டுதான் அறியமுடியும்.
2. நடத்தினார் – நடத்துகிறார் -நடத்துவார்.அவருக்கு அடங்கி அவரால் முன்னிறுத்தபடும் தலைவர்களுக்கு அடங்கி நடந்தால் அவரின் நடத்துதலை நன்றாக அறியமுடியும்.
3. விடுவித்தார் – இரட்சிக்கிறார் – தப்புவிப்பார். மறைவான கண்ணிகளை அறியும் ஆற்றல் ஆவியான தேவனுக்கு மட்டுமே உண்டு. அவரை கொண்டுதான் மறைமுக கண்ணிகளை அறுத்து விடுதலையின் பாதையில் முன்னேறமுடியும்.
4. கண்டார் – காண்கிறார் – காண்பார். உலகியல் காரியங்கள், கண்டுபிடிப்புகளின் உச்சங்கள் ஆகிய எவைகளை கொண்டும் அவரின் கண்களுக்கு மூடாக்கு போடமுடியாது. அவர் பார்த்து கொண்டேயிருக்கிறார்.
5. அசைவாடினார் – ஆராய்கிறார் – கவனிக்கிறார். உள்ளம், மூளை யாவற்றையும் உருவாக்கினவர் அவராகையால் அதை கட்டுப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
6. எழும்பினார் – எழுப்புகிறார் – எழுப்புவார்.அவர் ஆவியாயிருப்பதினால் தலையை உயர்த்தவும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கவும், ஆவியை புதுப்பிக்கவும் அவரால் இயலும்.
7. மனஸ்தாபபட்டார் – துக்கப்படுகிறார் – கோபப்படுகிறார்.இரட்சிக்கபட்டவர்களின் செயல்பாடுகளின் தடுமாற்றமே அவரை இவ்விதம் செயல்பட வைக்கிறது. இந்த நிலை ஏற்படுமானால் அவரின் கோபாக்கினை அக்கினிபோல பற்றியெரியும்.
கர்த்தாவே, ஆவியான உம்மை சரியாக புரிந்துகொள்ளாததினாலேயே நாங்கள் அனேக நேரங்களில் தடுமாறி, இடறி உம் கோபத்தை வெளிபடுத்த காரணமாகின்றோம். எங்களில் இருப்பவராகிய நீரே எங்களுக்கு எதிராக எழும்புகிறவர் என்பதை பலதருணங்களில் மறந்து போகிறோம். எங்களை மன்னிப்பீராக. இனி நாங்கள் எங்கள் ஆவிக்குரிய வாழ்வை உமக்குள் மாத்திரமே கட்டியெழுப்ப எங்களுக்கு நீர் உதவி செய்யும்.