ஆராதனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன

ஆராதனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • நாம் இப்போது புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்கிற வார்த்தை எல்லாம் .என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளுவோம்
  • ஆராதனை என்ற வார்த்தையை ஒரே அர்த்தமாக நாம் எடுத்துக் கொண்டால் அது நமக்கு பல குழப்பத்தை தான் ஏற்படுத்தும், ஏனென்றால் தமிழ் வேதாகமத்தில் அதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  • நாம் ஆராதனை என்ற வார்த்தையை சரியாக உணர்ந்து கொண்டு ஆராதனை செய்தால் அது தேவனுக்கு பிரியமான ஆராதனையாக இருக்கும்.

WORSHIP என்றஆங்கில வார்த்தை தமிழில் ஆராதனை மொழிப்பெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆராதனை என்ற வார்த்தைக்கு கிரேக்க வேதாகமத்தில் தேவன் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

நாம் ஆராதனை என்ற வார்த்தைக்கு புதிய ஏற்பாட்டில் என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மாத்திரம் நாம் இந்த பகுதியில் கற்றுக் கொள்ளுவோம்.

தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும்.

Mat 4:10 (KJV+) Then5119 saith3004 Jesus2424 unto him, 846Get thee hence,5217 Satan:4567 for1063 it iswritten,1125 Thou shalt worship4352 the Lord2962thy4675 God,2316 and2532 him846only3441 shalt thou serve.3000

Mat 4:10 (Tamil OV) அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.

Joh 4:24 (KJV+)  God2316 is a Spirit:4151 and2532 they that worship4352 him846 must1163 worship4352 him in1722 spirit4151 and2532 in truth.225

Joh 4:24 (Tamil OV) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

ஆராதனை மற்றும் தொழுது கொள்ளுதல் என்ற வார்த்தைக்கும் ஒரே கிரேக்க எண் தான் 4352

ஆராதனை என்ற வார்த்தைக்கும் தொழுது கொள்ளுதல் என்ற வார்த்தைக்கும்  இயேசு கிறிஸ்து பயன்படுத்தின கிரேக்க வார்த்தை எண் 4352

G4352

προσκυνέω

proskuneō

pros-koo-neh’-o

From G4314 and probably a derivative of G2965 (meaning to kiss, to fawn or crouch to – (do reverence to, adore) worship.

ஆராதனை என்றால் ஒன்றுக்கு ஏதுவாக முத்தமிடுவது, மிகத்தாழ்மையாக குனிவது. மிக உயர்வாக மதிப்பது.

  • தேவனுக்குரியவைகளை உயர்வாக மதிப்பது தான் இந்த இடத்தில் ஆராதனையாக இருக்கிறது.

வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.

Mat 15:9 (KJV+)  But1161 in vain3155 they do worship4576 me,3165 teaching1321 for doctrines1319 the commandments1778 of men.444

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

ஆராதனை என்ற வார்த்தைக்கு இயேசு கிறிஸ்து இங்கே பயன்படுத்தின கிரேக்க வார்த்தை எண் 4576.

G4576

σέβομαι

sebomai

seb’-om-ahee

Middle voice of an apparently primary verb; to revere, that is, adore

  • ஆராதனை என்ற வார்த்தை இங்கே உயர்வாக மதிப்பது,வழிபடுவது என்று பயன்படுத்தப்படுகிறது.

அன்னாள் ஆராதனை செய்து கொண்டு இருந்தாள்.

Luk 2:37 (KJV+)  And2532 she3778 was a widow5503 of about5613 fourscore and and four3589, 5064 years,2094 which3739 departed868 not3756 from575 the3588 temple,2411 but served3000 God with fastings3521 and2532 prayers1162 night3571 and2532 day.2250

Luk 2:37   ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

அன்னாள் ஆராதனை செய்து கொண்டிருந்தாள் என்ற இந்த வார்த்தைக்கான கிரேக்க எண் 3000.

G3000

λατρεύω

latreuō

lat-ryoo’-o

From λάτρις latris (a hired menial); to minister (to God),

  • சேவை செய்வது அல்லது வேலை செய்வது என்ற இந்த கிரேக்க வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தேவனுக்கு தொண்டு செய்கிறவன்.

Joh 16:2 (KJV+)  They shall put4160 you5209 out of the synagogues:656 yea,235 the time5610 cometh,2064 that2443 whosoever3956 killeth615 you5209 will think1380 that he doeth4374 God2316 service.2999

Joh 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

தேவனுக்கு தொண்டு செய்கிறவன் என்ற வார்த்தைக்கு இயேசுகிறிஸ்து பயன்படுத்தின கிரேக்க வார்த்தை எண் 2999.

G2999

λατρεία

latreia

lat-ri’-ah

From G3000; ministration of God

  • தொண்டு செய்கிறவன் என்ற வார்த்தைக்கு தேவனுக்கு சேவை செய்கிறவன் வேலை செய்கிறவன் என்று பயன்படுத்தப்படுகிறது.

கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்.

Act 13:2 (KJV+)  As(1161) they846 ministered3008 to the3588 Lord,2962 and2532 fasted,3522 the3588 Holy40 Ghost4151 said,2036 Separate873 (1211) me3427 (5037) Barnabas921 and2532 Saul4569 for1519 the3588 work2041 whereunto3739 I have called4341 them.846

Act 13:2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

கர்த்தருக்கு ஆராதனை செய்து என்ற வார்த்தைக்கு கிரேக்க எண் 3008 பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

G3008

λειτουργέω

leitourgeō

li-toorg-eh’-o

From G3011; to be a public servant

  • பொதுச் சேவை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆராதிக்கிற அவரை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

Act 17:23 (KJV+)  For1063 as I passed by,1330 and2532 beheld333 your5216 devotions,4574 I found2147 an(2532) altar1041 with this inscription,1722, 3739, 1924 TO THE UNKNOWN57 GOD.2316 Whom3739 therefore3767 ye ignorantly50 worship,2151 him5126 declare2065 I1473 unto you.5213

Act 17:23  எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இந்த வசனத்தில் ஆராதிக்கிற என்ற வார்த்தைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பயன்படுத்தின கிரேக்க வார்த்தையின் எண் 2151.

G2151

εὐσεβέω

eusebeō

yoo-seb-eh’-o

From G2152; to be pious

  • ஆராதனை என்ற வார்த்தைதேவ(சமய) பற்றுள்ள என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இப்படி ஆராதனை என்ற வார்த்தைக்கு அநேக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து நாம் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்பதைக் குறித்துகற்றுக் கொள்ளுவோம்

ADD YOUR COMMENT

Powered By Indic IME