கூலிக்காக வேலைசெய்கிற கூலியாள் ஓடிப்போகிறான். ஆடுகளைக் குறித்து கவலைப்படான்

கூலிக்காக வேலைசெய்கிற கூலியாள் ஓடிப்போகிறான். ஆடுகளைக் குறித்து கவலைப்படான்.

The hireling flees because he is a hireling and does not care about the sheep. (John 10:13)

Jn12:6; Act18:17; Phi2:20; 1Pet5:7; Gen31:39; Jud18:4; Jer10:21; Jer13:20,21; Zec11:15-17.

கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். (யோவான் 10:13)

யோவான் 12:6; அப்போஸ்தலர் 18:17; பிலிப்பியர் 2:20; 1பேதுரு 5:7; ஆதியாகமம் 31:39; நியாயாதிபதிகள் 18:4; எரேமியா 10:21; எரேமியா 13:20,21; சகரியா 11:15-17.

கூலியாள்:
சம்பளத்துக்காக நியமிக்கப்பட்டவர்கள். எஜமான் தன் வேலையின் மேலும், கூலியாள் தன் கூலியின்மேலும் கவனமுள்ளவர்கள். எஜமான் தன் கூலியை குறித்தோ, கூலியாள் தன் பணியைக் குறித்தோ பெரிதாக நினைப்பதில்லை. இந்த அணுகுமுறையையே இயேசு குறிப்பிடுகிற காரியமாகும்.

வேலையாள் கூலிக்கு பாத்திரவான் என்பது உண்மையோடும் உத்தமத்தோடும் பணி செய்கிறவர்கள் குறித்த சித்தாந்தமாகும். அப்படிபட்டவர்கள் உலகத்திலிருந்தும், தேவனிடமிருந்தும் கூலியை பெறுகின்றார்கள். ஆனால் கடமைக்காகவும்,கூலியை நினைவிற்கொண்டும் பணியாற்றுகின்றவர்கள் பணிசுமை குறித்தும், குறைவான கூலி குறித்தும் முறுமுறுக்கின்றவர்களாயுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் நல்ல மேய்ப்பன் கூட்டத்தை சார்ந்தவர்களல்ல.
பணியைக் குறித்து, பணி கொடுத்தவர்களைக் குறித்தும், பணியினிமித்தம் பயன் பெறுவோர்கள் குறித்தும் கரிசனைக் கொள்ளாத வேலையாட்கள் நம் சமூகத்திலும், திருச்சபைகளிலும் பெருகிவிட்டார்கள். இவர்கள் பணிகொடுக்கிறவர்கள் பணியாட்களாகிய தங்களை கவுரவமாகவும், மனிதாபிமானமாகவும், நிறைந்த கூலி தராமலும் நடத்துவதாககூறி போராடுகின்றனர். தேவன் இந்த முறைமையை விரும்பவில்லை. நாம் நம் பணியை குறைபடாமல் செய்யும்போது குறை நீக்கும் இயேசுவின் எக்ஸ்ட்றா கூலி நம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதே அவர் செய்வது.

இந்த கூலியாளிடம் மூன்று மாறுபாடான தன்மைகள் காணப்படுகின்றன.

  • கூலிக்காக அமர்த்தப்பட்ட கூலியாள். கூலியைக் குறித்தே சிந்திக்கிற கூலியாள்.
  • ஓடிப்போகிற – எதிர்த்து நிற்கிற கூலியாள்.
  • ஆடுகளைக் குறித்து கவலைபடாத கூலியாள்.
    இக்காலத்தில் இப்படிபட்ட தன்மை பெருகியுள்ளதினால்தான் மனித சமுதாயம் தறிகெட்டு, நெறிகெட்டு சீர்குலைந்து போயுள்ளது.
  • சபையே இப்படிபட்ட மேய்ப்பர்களையும், மந்தையின் ஆடுகளையும் இனம் கண்டு வெளியேற்று. இல்லையெனில் பிரதான மேய்ப்பர் வெளிப்பட்டு பாபிலோனுக்கு சிறையாக அனுப்புவார் மறவாதே.
  • கர்த்தாவே நாங்கள் செய்கிற வேலைக்குத்தக்க கூலியை எங்களுக்கு தருகிறீர் என்று அறிந்து உண்மையாய் உழைக்க பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME