அவர்மேல் கைபோடவில்லை

ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை

Now some of them wanted to take Him,but no one laid hands on Him. (John 7:44)

Jn7:30; Jn8:20; Jn18:5,6; Jn10:39,40; Mk12:12; Lk19:47,48; Act18:10,11; Act23:7-11; Act27:23-25; Isa54:15-17.

அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள், ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. (யோவான் 7:44) 

யோவான் 7:30; யோவான் 8:20; யோவான் 18:5,6; யோவான் 10:39,40; மாற்கு 12:12; லூக்கா 19:47,48; அப்போஸ்தலர் 18:10,11; அப்போஸ்தலர் 23:7-11; அப்போஸ்தலர் 27:23-25; ஏசாயா 54:15-17.

இந்த நாளிலே ஏசாயா 54:15-17 ன் பகுதியை நாம் இயேசுவின் ஜீவிதத்தை மையமாக வைத்து தியானிப்போம்.

இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கும்,
அவருக்கு சேவை செய்கிறவர்களுக்கும் அவர் தந்துள்ள வாக்கானது:

  1. உனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் என்னால் அனுப்பப்பட்டவர்களல்ல. 
  2. உனக்கு விரோதமாய் எழும்புவோர் உன் பக்கம் வருவதுவரையிலும் தாமதித்திரு.
  3. உனக்கு எதிராக எழும்புகிறவனை உருவாக்கினவர் நானே. நான் அவனை என் சார்பாய் இயக்குவதுவரையிலும் தரித்திரு. எரிச்சலடையாதே.
  4. உனக்கு விரோதமான ஆயுதங்கள், தீங்குகள் வாய்க்காது.
  5. உனக்கு விரோதமாக எழும்புகிறவனை குற்றப்படுத்தி மேற்கொள்ளும் அதிகாரத்தை உனக்கு தந்துள்ளேன்.
  6. உன்னை ஏற்படுத்தி நிலைநிறுத்தியவர் நானே. நீ ஒரு பணியாள் மட்டுமே.
  7. என் நீதியையும், சுதந்தரத்தையும் நான் நானே காத்துக்கொள்வேன்.

கர்த்தாவே உம் குமாரனை கொண்டு இந்த வாக்குத்தத்தங்களை  நிறைவேற்றி எங்களுக்கு உற்சாகம் தந்துள்ளதினால் நாங்கள் இனி சோர்ந்து போவதில்லை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME