அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள்.
others have labored, and you have entered into their labors.(John 4:38)
Jn4:37,38; 1Cor3:1-15; Deu6:10-25; Jos24:13.
நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். (யோவான் 4:38)
யோவான் 4:37,38; 1கொரிந்தியர் 3:1-15; உபாகமம் 6:10-25; யோசுவா 24:13.
பிரயாசப்படாமல் கிடைத்த பலன்:
மோசேயின் கட்டளைக்கும், தலைமைக்கும் உட்பட்டு வந்த இஸ்ராயேலர் பிறத்தியாரின் ஆஸ்திகள், சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை பெற்றார்கள்.
இந்த நாடு கானான் நாடு எனப்படுகிறது.
வாக்குதத்தங்களின்படி தேவனால் தம்மை நம்பி, தம்மை பின்தொடருகிறவர்களுக்கு பிரயாசப்படாமலே பலாபலன்கள் கொடுக்கபடுகிறது என்பதை பலருடைய வாழ்வில் அறிகிறோம்.
தேவனுடைய விதிமுறைகளுக்கு உட்படாத எவரையும் தள்ளவும், அவர்களுக்குரியதை பிறருக்கு கொடுக்கவும் அவரால் முடியும். ஏனெனில் பலாபலன்களை உருவாக்குகிறவர் அவரே.
யோவான் 4 ல் வயல்வெளியில் நடக்கும் வினோதத்தை தெரிவிக்கின்றார்.
விதைப்பவர் ஒருவர், அறுப்பவர் இன்னொருவர் என்பதாகும்.
சுவிசேஷமயமாக்குதலிலும் சுவிசேஷத்தை விதைப்பவர்கள் அறுவடை செய்வது சுருக்கமே. அனேகர் ஒருவரால் இரட்சிக்கப்படுகிறார், இன்னொருவரால் வளர்க்கப்படுகிறார்.
இங்கே உரிமைகோர எதுவுமில்லை. ஆத்துமாக்கள் தேவனுடையவர்கள். ஊழியகாரர்கள் அவர்களை மேய்க்கிற வேலைக்காரர்கள். அவ்வளவுதான்.
அவர்கள் மேல் உரிமை பாராட்ட இயலாது.
அடுத்தபடியாக, நாம் விதைக்கின்றோம், வளர்க்கின்றோம். ஆனால் அறுவடை செய்வது தேவனுடைய தூதர்களே என்பதை மறந்து போக வேண்டாம். அப்பொழுதுதான் நாம் விதைத்ததின், வளர்த்ததின் மேன்மை புரியும்.
எனவே ஊழியகாரர்கள் தெய்வபயத்தோடு தங்களை தேவராஜ்ஜிய வேலைக்காரர்கள் என்பதை மறவாது பணி செய்ய ஒப்புக்கொடுப்பீர்.
பொக்கிஷ சாலையில் விளைச்சல் சேர்க்கப்பட்டால்தான் வேலைக்காரர்களுக்கு கூலி கிடைக்கும்.
யோவான் 12:26. இப்பகுதியை தவறாக புரிதல் வேண்டாம். இன்னொரு தொழுவத்தின் ஆடுகளை அபகரிக்க (யோவான் 10:16) முயல வேண்டாம். அது பாவமாகும்.
அவர் கொடுக்காமல் நாமாகவே எடுத்துகொள்ள முயற்சி செய்யும் எதுவும் அற்ப நிமிட சந்தோஷமே.
அவர் தருவது வரையிலும் பொருத்திருப்போம்.
இஸ்ராயேல் வாக்குபெற்று அதனை அடைந்துகொள்ள 600 வருடங்களுக்குமேலாக காத்திருந்தனர்.
தேவ ஜனமே, உழைப்பை நம்பி நீ வாழலாம். அதிலே மேன்மையுண்டு.
ஆனாலும், விசுவாசத்தில் பலன் – கீழ்படிதலின் பலன் – அர்ப்பணத்தின் பலன் அதைவிட அதிகம் என்பதை மறவாதீர்.
பிரயாசபட இயலாமல் அல்லது பிரயாசபட்டும் ஒன்றும் கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தால் அவர் வருவார்.
உன்னை நன்மைகளால் நிருப்புவார் என்பதை மறவாதீர். நிச்சயம் பலன் உண்டு.
கர்த்தாவே, அனேக வேளைகளில் எங்களை நாங்கள் மெச்சி வாழ்கின்றோம். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்கிறோம். எங்கள் இயலாமையை ஏற்காமலிருக்கின்றோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் நீரின்றி எங்கள் பிரயாசத்தை தொடரோம். உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய எங்களை ஒப்படைக்கின்றோம்.