அவரோ அவர்கள் கைகளுக்குத் தப்பி – தங்கினார்.
Hand.
Jn10:31; Jn7:30,44; Jn8:59; Jn11:56,57; Jn12:36; Jn1:28; Jn3:26; Mat12:14,15.
இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, (யோவான் 10:39)
யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். (யோவான் 10:40)
யோவான் 10:31; யோவான் 7:30,44; யோவான் 8:59; யோவான் 11:56,57; யோவான் 12:36; யோவான் 1:28; யோவான் 3:26; மத்தேயு 12:14,15.
கைகளுக்கு தப்பி:
இயேசுகிறிஸ்து தேவகுமாரனாக வந்தவர். அனைத்து படைப்புகளும் இயேசுகிறிஸ்துவின் வழியாக தான் படைக்கப்பட்டது. மனுக்குலமும் அவர் மூலமாகவே உண்டாயிற்று. அப்படிபட்ட இயேசு மனிதனைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார் என்று நாம் கருத வேண்டாம். அவருடைய இறுதி நாட்கள் நெருங்காததினால் அவர் எதிராளிகளின் கைகளில் அகப்படவில்லை.
கிறிஸ்துவை நம்பி வாழ்கின்றவர்களாகிய அவருடைய பணியாட்கள், விசுவாசிகள் அவருடைய அனுமதியில்லாமல் எதிராளிகளின் கைகளில் அகப்படுவதில்லை. கிறிஸ்துவை பிதாவானவர் காத்துக்கொண்டதுபோல தேவனுடைய வேலையாட்களையும் தேவன் காத்துக்கொள்கின்றார்.
தேவன் நமது படசத்தில் இருப்பது வரையிலும், நாம் தேவனின் ஆளுகைக்குள் இருப்பது வரையிலும் சத்துரு நம்மேல் ஜெயம் கொள்ள இயலாது.
நாம் பாவம் செய்யும்போதோ, நம்மேல் குற்றம் சுமரும்போதோ தேவனுடைய ராஜ்ய பணியின் நிறைவேற்ரமாகிய ராஜ பலியினிமித்தமாகவோ நாம் கைவிடப்படலாம்.
அனேகரின் மீட்புக்காய் இயேசு கைவிடப்பட்டதுபோல அனேகரில் இரட்சிப்பு உண்டாகும்படியாய் இரத்த சாட்சிகளாக்கப்படும்போது கைவிடப்படுதல் உண்டாகும். இரத்த சாட்சியின் பாக்கியம் யாவருக்கும் கிடைப்பதில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிலருக்கே கிடைக்கிறது.
நமது காலங்கள் தேவனுடைய கரங்களில் உள்ளது. அந்த காலங்கள் முடிவது வரையிலும் தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
கர்த்தாவே நாங்கள் உமது ஆளுகைக்குள்ளிருப்பதாக நம்பியுள்ளோம். எதிராளிகள் எங்கள்மேல் பெலம் கொள்ளாதபடி நீர் எங்களை காத்துகொள்ளும்.