அவரைக்குறித்து மறுபடியும் பிரிவினை உண்டாயிற்று

அவரைக்குறித்து மறுபடியும் பிரிவினை உண்டாயிற்று.

Therefore there was a division again among the Jews because of these sayings. (John10:19-21)

Jn7:20; Jn8:48,52; Jn9:6,32; Mt11:5,6; Isa53:8; Act18:14,15; Act25:19,20; Act26:30-32.

இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 10:19)

யோவான் 7:20; யோவான் 8:48,52; யோவான் 9:6,32; மத்தேயு 11:5,6; ஏசாயா 53:8; அப்போஸ்தலர் 18:14,15; அப்போஸ்தலர் 25:19,20; அப்போஸ்தலர் 26:30-32.

இயேசுவை குறித்த தப்பபிப்பிராயம்:
தேவனின் மகன் என்று இயேசுவைக் குறித்து விவிலியம் படிப்பிக்கின்றது. உலகை படைத்தவரும், ஆக்கபூர்வமாய் நடத்துகிறவரும் அவரே. உலகை முடித்து வைக்கப்போகிறவரும் அவரே. அப்படிப்பட்ட எஜமானத்துவ தேவனையும் அவருடைய குமாரனையும் குறித்து தங்களிஷ்டபடி பேசும் மனுக்குலமானது அதற்குரிய தண்டனையைப் பெறப்போகின்றது.

இயேசுவை பிசாசு பிடித்தவர், பைத்தியகாரர் என்று பலவாறாக பேசவும் எதிராக செயல்படவும் எத்தனித்தவர்களைப்போல இக்காலத்திலும் அவரைக் குறித்து பலவாறாக பேசிக்கொள்கிறவர்களும் உண்டு.

வளர்ச்சியின் பாதையிலும், எழுச்சியின் பாதையிலும் ஏற்படுகின்ற குறை சொல்லுகிறவர்களின் குறுக்கீடுகள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவும் அனுமதிப்பதில்லை. சாத்தான் குறை சொல்லுகிறவனாக இருப்பதினால் அவனின் ஆவியை பெற்றவர்களும் குறை சொல்லுகிறதையே பணியாகக் கொள்கின்றனர்.

இயேசுவையும், இயேசுவின் செய்திகளையும், கிரியைகளையும் புரிந்துகொள்ள இயலாதவர்கள் தங்களிஷ்டம்போல் பேசுவதைக் குறித்து தேவன் சும்மா இருப்பதில்லை. அவர்களின் வாயே அவர்களை நியாயந்தீர்க்கும். எனவே இயேசுவைக் குறித்து எதிரிடையாக பேசுகின்றவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டிவரும்.
பாரம்பரியமாக அனுஷ்டித்துவரும் வழிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவரும்போது எதிரான மனோபாவம் உண்டாயிருப்பது உண்மையே.

உண்மைக்கும், உயர்வுக்கும் நேராக ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் ஏற்கதக்கவைகள். எனவே இயேசுவினால் கிடைக்கும் பாவமன்னிப்பு, மெய்யான சந்தோஷம், ஆசீர்வாதங்கள், நித்திய ஜீவன் போன்றவைகளில் நாம் கவனம் செலுத்தி முன்னேறுவோம்.

கொச்சைப்படுத்திகிறவர்களையும், குறை சொல்லுகிறவர்களையும், நவ நாகரீக முறைகளையும் விட்டு சற்று விலகி நிற்போம்.

கர்த்தாவே உம்மையும் உம் மகனையும் குறித்து இடறல் அடைவதும் இடறல் உண்டாக்குவதும் அதிகரித்துவரும் இக்காலத்தில் நாங்கள் உம்மில் நிலையாய் நிற்க பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME