இயேசு கிறிஸ்து மட்டுமே அவரை வெளிப்படுத்துகின்றார்.

நாம் அவரை காண முடியாது, அவருக்கு ரூபமில்லை, இயேசு கிறிஸ்து மட்டுமே அவரை வெளிப்படுத்துகின்றார்.

தியான பகுதி – யோவான் 4: 21 – 24.

ஆவியாயிருந்து அவர் நம் வாழ்வில் செய்வது என்ன?

1. நமது உள்ளத்தில் – இருதயத்தில் இருப்பதை அறிகிறார்.
– நமது உள்ளத்தை – இருதயத்தை திறக்கிறார். அப்போஸ்தலர் 16:14.
– இருதயத்தில் இருப்பதை அறிகிறார். அப்போஸ்தலர் 5:4; மாற்கு 7:21-23.
– இருதயத்தை விருத்தசேதனம் செய்கிறார். ரோமர் 2:29.
– இருதயத்தில் வசனத்தை வைக்கிறார். ரோமர் 4:12; ரோமர் 10:8.
– இருதயத்தில் விசுவாசத்தை எழுப்புகிறார்.

2. நமது மனசாட்சியை தூய்மைபடுத்துகிறார். எபிரெயர் 9:14; எபிரெயர் 10:22.
நல் மனசாட்சி, சுத்த மனசாட்சியாயிருக்க விரும்புகிறார்.
– மனசாட்சி தூய்மையானால்தான் நாம் தேவனை பார்க்கமுடியும்.
– குற்றமற்ற மனசாட்சியாக விளங்க செய்கிறார். அப்போஸ்தலர் 24:16.
– பேராசை புகாதபடி காக்கிறார். மத்தேயு 23:28.
மாயம் வந்தால் மாய்மால மனசாட்சி,
துரோகம் வந்தால் துர் மனசாட்சி.
இவைகள் வராதபடி காக்கிறார்.

3. நம்மை புது சிருஷ்டியாக வைத்திருப்பவரும் அவரே.
உள்ளில் உண்டாகும் செம்மையான மாற்றமே வெளி அடையாளம்.
– உள்ளான மனிதன் புதுப்பிக்கப்டுதலே புது சிருஷ்டியின் அனுபவம். 2கொரிந்தியர் 4:16; எபேசியர் 4;23.
– உள்ளான மனிதன் பலப்பட வேண்டும். எபேசியர் 3:16.

4. நம்மை நடத்துகிறார். கலாத்தியர் 5:18.
எங்கே நடத்துகிறார்?
– சத்தியத்திலே நடத்துகிறார். யோவான் 16:13.
– இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறார். அப்போஸ்தலர் 8:29.
– விடுதலைக்கு நேராக நடத்துகிறார். 2கொரிந்தியர் 3:17.
– உயிர்ப்பிக்கபடுதலுக்கு நேராக நடத்துகிறார். 2கொரிந்தியர் 3;6.
– செழிப்புக்கு நேராக நடத்துகிறார். சங்23.

5. நமக்கென்று தேவன் வாக்களித்தவைகளையும், உருவாக்கி வைத்துள்ளவைகளையும் நமக்கு வெளிபடுத்துகிறார். 1கொரிந்தியர் 2:9,10. வாக்களித்தவை எவை? வாக்குதத்தங்கள். வக்களித்தவைகள் வருவது வரையிலும் பொறுமை நமக்கு அவசியம். உருவாக்கி வைத்துள்ளது எது? அவருடைய ஸ்தலம், ராஜ்ஜியம். யோவான் 14:2,3.

ஜெபம்:கர்த்தாவே எங்களின் தடுமாற்றங்களில் நாங்கள் இடறி விழுந்துவிடாமலிருக்க நீர் உம்முடைய நல்ல ஆவியை எங்களுக்கு தந்துள்ளீர். அதற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்குள் தூய்மையும், பெலமும், ஆவியின் கனிகளும் உண்டாக உதவி செய்யுமாறு கேட்கின்றோம். நீர் எங்களுக்கு தந்துள்ள உமது ஆவியை நாங்கள் எந்த சூழலிலும் இழந்து விடாமலிருக்க எங்களுக்கு கிருபை செய்யுமாறு இயேசுகிறிஸ்துவின் மூலம் கேட்கின்றோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME