சித்தத்தின்படி

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் அறிந்துகொள்ளுவான்.

If anyone wills to do His will, he shall know concerning the doctrine. ( John 7:17)

Jn8:31,32,43,47; Mt6:22; Lk8:15; Act10:1-6; Act11:13,14; Act17:11; Phi3:15,16; Ps25:8,9,12; Ps119:10,101,102; Isa35:8; Jer31:33,34; Hos6:3; Mi4:2; Mal4:2.

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.(யோவான் 7:17) 

யோவான் 8:31,32,43,47; மத்தேயு 6:22; லூக்கா 8:15; அப்போஸ்தலர் 10:1-6; அப்போஸ்தலர் 11:13,14; அப்போஸ்தலர் 17:11; பிலிப்பியர் 3:15,16; சங்கீதம் 25:8,9,12; சங்கீதம் 119:10,101,102; ஏசாயா 35:8; எரேமியா 31:33,34; ஓசியா 6:3; மீகா 4:2; மல்கியா 4:2.

சித்தத்தின்படி செய்கிறவன்:

தேவன் தமது விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்படியாய் பயன்படும் மனிதர்களை தேடுகிறார். இயேசுகிறிஸ்து பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் பாத்திரமாய் திகழ்ந்தார். சீஷர்கள் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்களாயிருந்து தங்கள் உடைமைகளை இழந்தார்கள். இவ்வுலகில் எவரொருவர் கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றும் இருதயம் உள்ளவராய் இருக்கிறாரோ அவர் இவ்வுலகின்மேல் ஆவலுள்ளவராயிரார். ஞான உணர்வுள்ளவராயும் இருப்பர். அவருக்கே முதலுரிமை கொடுப்பர்.

யூதர்கள் பிதாவின் மக்களே. அப்படியிருந்தும் இயேசுவின் உபதேசத்தை அறியும் ஞானக்கண்கள் இல்லாதவராயினர். ஆகையினால் கிறிஸ்துவின் உபதேசத்தையும் ஏற்கவில்லை. இயேசுவையும் ஏற்கவில்லை. இன்றுவரையிலும் தேவனற்ற – ஆலயமில்லாத மக்களாயிருக்கின்றனர்.

கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் உபதேசத்தையும் அறிய அவர் நடந்த பாதையில் நடக்க முயற்சிக்க வேண்டும். அவர் நின்ற களத்துமேட்டில் நிற்க வேண்டும். அவரைபோல வாழ கற்றிருக்க வேண்டும்.

சித்தம் அறியாது பரலோகம் செல்ல இயலாது.

கர்த்தாவே, உம் குமாரனின் வழி நின்று நாங்கள் செயல்படும்படியான உமது ஞானகண்களை எங்களுக்கு தந்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME