கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எப்படி அவயவங்களாக இருக்கிறோம்

கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எப்படி அவயவங்களாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை வேதாகமத்தில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்.

கிறிஸ்துவின் சபை தேவனுடைய ஆலயமாகவும் தேவனுடைய மந்தையாகவும் இருக்கிறது என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது ஒன்றான மெய் சபை எப்படி கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்பதை குறித்து நாம் கற்றுக் கொள்ளுவோம்.

கிறிஸ்துவின் சபையானது கிறிஸ்துவின் சரீரம் என்று அழைக்கப்படுகிறது.

Eph 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

Col 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; 

கிறிஸ்துவின் சபையானது ஒரே சரீரம் என்று அழைக்கப்படுகிறது.

Eph 4:4  ஒரே சரீரமும், 

  • ஒரே சரீரம் என்றால் அதற்கு ஒரே தலை தான் இருக்க வேண்டும்.
  • நாம் கிறிஸ்துவின் சரீரம் என்றால் கிறிஸ்து தான் அதற்கு ஒரே தலையாக இருக்க வேண்டும்.
  • ஆனால் இன்றைக்கு சபை என்ற சரீரம் இருக்கிறது ஆனால் அந்த சரீரத்தின் தலைக்கு பேதுரு பவுல்(உதாரணமாக பவுல்சபை, பேதுரு சபை) போன்றவர்களுடைய பெயர்களை வைக்கும் போது அந்த சரீரம் கிறிஸ்துவினுடையதாக எப்படி இருக்கும்?
  • இன்றைக்கு ஒவ்வொரு சபைக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள் உதாரணமாக ரோம சபைக்கு போப் தலை(வராக)யாக இருக்கிறார் அப்படியென்றால் அந்த சரீரம் போப்புடையதாக இருக்குமே தவிர கிறிஸ்துவினுடையதாக ஒருபோதும் இருக்கும்.
  • கிறிஸ்து சரீரமாகிய சபைக்கு  தலையாக இருக்கிறார்.
  • நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாக  இருக்கிறோம்.

நாம் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்திற்குள்ளாக எப்படி அவயவங்களாக முடியும்?

1Co 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

  • நாம் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறும் போது தான் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாகிறோம்.
  • இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தினால் ஞானஸ்நானம் பெறாமல் அந்த கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஒருபோதும் அவயவங்களாகவே முடியாது.

இயேசுகிறிஸ்து யூதர்களையும் புறஜாதிகளையும் ஒரே சரீரமாக தேவனுக்கு எப்படி ஒப்புரவாக்கினார்?

Eph 2:14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

Eph 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

Eph 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

  • பிரிவினையின் நடுச்சுவராய் இருந்த சட்டத்திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்தார்.
  • பகையை சிலுவையினால் கொன்று போட்டார்
  • இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
  • இன்றைக்குகிறிஸ்துவின் சரீரத்தில் யூதர்கள் எப்படி அவயவங்களாக இருக்கிறார்களோ அப்படியே புறஜாதிகளும் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாக இருக்கிறார்கள்.

இருதிறத்தாரும் (யூதர்கள்புறஜாதிகள்) எப்படி அந்த சரீரத்திற்குள்ளாக பிரவேசித்தார்கள்?

Eph 2:17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

Eph 3:3 அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.

  • யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் சமாதானத்தை சுவிசேஷமாக அறிவித்தார்.
  • யூதர்கள் புறஜாதிகளும் தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்ததினால் தான் அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாக இருக்கிறார்கள்.
  • புறஜாதிகள் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் போது உடன் சுதந்திரரானார்கள்.
  • யூதர்களும் புறஜாதிகளும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகின்ற போது நாமெல்லாரும் அந்த ஓரே சரீரத்திற்குள்ளானவர்களாக இருக்கிறோம்.
  • நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளானவர்களாக இருக்கின்ற போது கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறோம்.

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பாவமன்னிப்புக் கென்று ஞானஸ்நானம் பெறுகிற எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறார்கள்.

Gal 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

Gal 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கிறிஸ்துவின் சபையாகிய  சரீரத்திற்கு இரட்சகர் யார்?

Eph 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

  • கிறிஸ்து மட்டுமே அவருடைய சரீரத்திற்கு இரட்சகராய் இருக்க முடியும்வேறெந்த மனுதனும் அவருடைய சரீரமான சபைக்கு இரட்சகராக இருக்க முடியாது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME