அவனிடத்தில் அநீதியில்லை.
And no unrighteousness is in Him. (John 7 :18)
Deu32:4; Job6:30; Job27:3; Job34:10; Ps51:5; Ps92:14; Ps119:134; Dan6:22; Rom6:13; 2Cor6:14; Heb6:10.
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
(யோவான் 7:18)
உபாாகமம் 32:4; யோபு6:30; யோபு27:3; யோபு 34:10; சங்கீதம் 51:5; சங்கீதம் 92:14; சங்கீதம் 119:134; தானியேல் 6:22; ரோமர் 6:13; 2 கொரிந்தியர் 6:14; எபிரெயர் 6:10.
அநீதியில்லா மனிதன்:
தேவன் அநீதியில்லாத சத்தியமுள்ள தேவன். அவர் நீதி செய்கிறவர்.
யோபு ஒரு அநீதியில்லாத மனிதனாக காணப்பட்டான் என்பதை அறிவோம். ஆனால் அவனை அநீதியுள்ளவன் என்று தீர்ப்பிட முனைந்த நண்பர்கள் தோற்றுபோயினர்.
யோபு தன் உத்தமத்திலே உறுதியாக நின்றான்.
தானியேல் ஒரு அநீதியில்லாத ஒரு தேவ மனிதனாக காணப்பட்டான். அநீதியின் மக்கள் மத்தியில் நீதியை நிலைநிறுத்தினான்.
இயேசுகிறிஸ்து அநீதியின் மக்களை நீதிமான்களாக்க நீதியுள்ளவராக சிலுவையிலே பாடுகளை அனுபவித்தார். 1 பேதுரு 3:18.
சுய மகிமையை தேடாதவன் உண்மையுள்ளவனாக மட்டுமலலாது நீதிமானாகவும் காணப்படுகிறான்.
சுய மகிமையை தேடாதவன் அநீதியில்லாதிருக்க காரணம்:
- அவன் நேர்மையுள்ளவனாக இருக்கிறான்.
- அவன் முகஸ்துதி பண்ணாதவனாக இருக்கிறான்.
- அவன் பாடுகளை அனுபவிக்க துணிவுள்ளவனாயிருக்கின்றான்.
- அவன் பொருளாசையைவிட்டு தூரமாய் விலகி நிற்கிறவனாயிருக்கின்றான்.
- அவன் பாவமான, துன்மார்க்கமான காரியங்களில் தலையிடாதவனாயிருக்கின்றான்.
இவனே உண்மையுள்ள நீதிமான்.
கர்த்தாவே, உம் குமாரனைபோல நாங்களும் எங்களை நீதியின் ஆயுதங்களாக ஒப்புகொடுத்து அநேகரை நீதியின் பாதையில் நடத்த எங்களுக்கு உதவி செய்யும்.