அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் முதல் நூற்றாண்டு காலத்தில் என்ன பிரசங்கித்தார்கள்?

ஒன்றான மெய் சபை உபதேசங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்.

இன்றைக்கு நாம் எல்லாரும் சபையின் அஸ்திபாரமாகிய அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் தான் நாம் இருக்கிறோம், இவர்கள் முதல் நுற்றாண்டு காலத்தில் உலகம் எங்கும் போய் என்னதான் பிரசங்கித்தார்கள்?

  • அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் செவி கொடுக்க வேண்டும் என்று தான் கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் நமக்குக் கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
  • அப்போஸ்தலர்களைக் கொண்டு தேவன் நமக்கு கொடுத்த சத்தியங்கள் என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்? அதை கண்டுபிடிக்க வேறு எங்கும் நாம் தேட வேண்டியதும் இல்லை பூமியை தோண்ட வேண்டியதும் இல்லை. தேவன் நமக்கு கொடுத்த நம்முடைய கையில் உள்ள வேதவாக்கியங்களே போதுமானது.

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பூமியெங்கும் சுற்றி திரிந்து என்ன உபதேசம் செய்தார்கள்?

சுவிசேஷம் என்றால் என்ன அர்த்தம்?

சுவிசேஷத்தின் அஸ்திபாரம் தான் கீழே உள்ள வேத பகுதி

1Co 15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

1Co 15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

இந்த காரியங்களை வைத்து தான் அப்போஸ்தலர்களும் தீர்க்கத்தரிசிகளும் பிரசங்கித்தார்கள். அதற்கு அநேக உதாரணங்கள் இருக்கிறது   

சபை ஸ்தாபிக்கப்பட்ட போது பேதுரு என்ன சுவிசேஷத்தை பிரசங்கித்தார்?

இந்த சுவிசேஷத்தின் நோக்கம் என்ன?

முதல் குறிக்கோள் அவர்கள் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதே.

Act 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

Act 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்திலும் அப்போஸ்தலர்கள் இதே காரியத்தை மையமாக வைத்து தான் போதித்தார்கள்.

Act 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

Act 3:20 உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

இந்த பிரசங்கத்தில் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள் எவ்வளவு பேர்?

Act 4:4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

அப்போஸ்தலர் 5ம் அதிகாரத்தில் பேதுரு என்ன பிரசங்கம் செய்தார்?

Act 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

Act 5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.

Act 5:32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

தேவன் ஏன் இயேசு கிறிஸ்துவை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்?

இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக அப்படி செய்தார் என்பதை கவனியுங்கள்.

இன்றைக்கு கிறிஸ்துவை விசுவாசத்தாலே போதும் நாம் இரட்சிக்கப்பட முடியும் என்று போதிக்கிறார்கள். ஆனால் மனந்திரும்பிஞானஸ்நானம் பெற்றால் தான் பாவமன்னிப்பை பெற்று இரட்சிக்கப்பட் முடியும் என்பதை அவர்கள்உணர்ந்து கொள்ளுவதில்லை

  • நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறாமல் நாம் கிறிஸ்துவைதரித்துக் கொள்ளவும் முடியாது தேவனுடைய பிள்ளைகள் ஆகவும் முடியாது.

அப்போஸ்தலர் 6ம் அதிகாரத்தில் அநேகர் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்து இருக்கிறார்கள்.

Act 6:7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

இங்கே விசுவாசத்துக்கு கீழ்ப்படிந்தார்கள் என்பது தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போஸ்தலர் 8ம் அதிகாரத்தில் சிதறிப்போனவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்து இருக்கிறார்கள்.

Act 8:4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

சிதறிப்போனவர்கள் ஏன் சுவிசேஷத்தைபிரசங்கிக்க வேண்டும்? ஏனென்றால் அதில் தான் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவதற்கான சகல சத்தியங்களும் அடங்கி இருக்கிறது.

  • அப்போஸ்தலர் இதே 8ம் அதிகாரத்தில் சுவிசேஷகனாகிய பிலிப்பு சமாரியாவிலே கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கித்தார்

இயேசு கிறிஸ்து செய்த அடையாள அற்புதங்களைப் பற்றி பிரசங்கித்தார்?

இல்லை ஒரு மனிதன் பாவத்திலிருந்து எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதைக் குறித்து அவர்களுக்கு போதித்தார்.

Act 8:5 அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.

பிலிப்பு கிறிஸ்துவை முன்னிட்டு ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தார்.

Act 8:12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

பிலிப்பு இயேசு கிறிஸ்துவை மாத்திரம் போதித்தாரா அல்லது ஞானஸ்நானத்தைக் குறித்தும் போதித்தாரா?

சமாரியவிலுள்ள ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதிலிருந்து அவர் ஞானஸ்நானத்தைக் குறித்து போதித்து இருக்கிறார் என்பதை நாம் கற்றுக் கொள்ள முடியும்

  • பாவ மன்னிப்புக்கொன்று ஞானஸ்நானம் பெறுவது என்பது தேவனுடைய ராஜ்யத்துக்கும் கிறிஸ்துவின் நாமத்துக்கும் ஏற்றவைகள் என்பது நாம் இங்கே கற்றுக் கொள்ள வேண்டிய சத்தியமாய் இருக்கிறது.

சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு ஞானஸ்நானம் சாட்சியாக இருந்தது.

Act 8:14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் இதே 8ம் அதிகாரத்தில் பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு என்ன போதித்தார் என்று கவனியுங்கள்.

Act 8:35 அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.

அந்த மந்திரிக்கு பிலிப்பு  இயேசுவை முன்னிட்டு ஞானஸ்நானத்தைக் குறித்து அவருக்கு போதித்தார்.

Act 8:36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

Act 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

Act 8:38 இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.

எத்தியோப்பியமந்திரிக்கு கிறிஸ்துவை முன்னிட்டு பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைக் குறித்து பிலிப்பிபோதித்தபடியால் தான் மந்திரி இதே தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குதடையென்ன என்று கேட்டார்.

இது தான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதிக்கக்கூடிய மூல உபதேசங்கள் இவைகளை வேத வாக்கியங்கள் சுவிசேஷம் என்று அழைக்கிறது.

  • இன்றைக்கு எத்தனை சுவிசேஷ கூட்டங்களில் இயேசு முன்னிட்டு ஞானஸ்நானத்தைக் குறித்து போதிக்கிறார்கள்.
  • ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற வில்லையென்றால் அவன் கர்த்தரால் சபையிலே சேர்க்கப்படுவதில்லை.

பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று சபையிலே சேர்க்கப்படாத மனிதன் இரட்சிக்கப்பட முடியுமா?

Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

  • ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கட்டளை அதற்கு கீழ்ப்படியாத பட்சத்தில் நாம் இரட்சிக்கப்பட முடியாது.
  • பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறாத எந்த மனிதனுக்கும்ஆக்கினை தீர்ப்பு தான் இருக்கிறது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME