அநேகர். இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றனர்

அநேகர். இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றனர்.

John performed no sign,but all the things that John spoke about this Man were true. (John 10:41)

Jn3:26-36; Jn1:29,33,34; Mat3:11,12; Lk7:28.

அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை, ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். (யோவான் 10:41)

யோவான் 3:26-36; யோவான் 1:29,33,34; மத்தேயு 3:11,12; லூக்கா 7:28.

உண்மை சாட்சி:
விவிலியம் ஏராளமான உண்மை சாட்சிகளை பதிவு செய்துள்ளது. இயேசுவை குறித்து சொல்லப்பட்டுள்ளவைகள் எல்லாம் வார்த்தைகளை கொண்டும், கிரியைகளை கொண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. விவிலியம் கட்டுகதைகளல்ல, புராண கதைகளின் தொகுப்பல்ல, கற்பனை கதைகளின் சுவராஜ்யம் அல்ல, உண்மை நிகழ்வுகளின் பதிவுகள். இப்படிபட்ட மெய்சாட்சிகளை கொண்ட இயேசுவை குறித்து நாம் கொடுக்கும் சாட்சியங்களும், வார்த்தைகளும் உயிருள்ள மெய் சாட்சிகளாக இருக்க வேண்டும். நாம் சொல்லுவதை, ஜனங்கள் விவிலியத்தை படித்து உண்மையென நம்ப வேண்டும். இயேசுகிறிஸ்துவை குறித்து நாம் குறிப்பிடும் சாட்சியங்கள் கிரியைகளினாலும், அற்புதங்களினாலும் உயிருள்ள சாட்சிகளாக ஆதாரபடுத்தப்பட வேண்டும். வார்த்தைகள் விசுவாசத்தை உண்டாக்கினாலும் கிரியைகள் அவிசுவாசத்தை உண்டாக்குமானால் அவை உயிருள்ள சாட்சிகளல்ல. அவைகளினால் மாறுபாடுகளும், அவகீர்த்திகளும் உண்டாகி கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படுகின்றது. நமது கிரியைகளே அல்லது நம்மில் தேவன் செய்யும் அற்புதங்களே நமது சாட்சிகளை, விசுவாசத்தை உறுதிபடுத்தும் ஆயுதங்கள். நம்மில் தேவனுடைய அற்புதங்கள் நடக்காவிட்டால் நமது ஜெபங்கள், ஊழியங்கள், பிரசங்கங்கள், தியானங்கள், உபவாசங்கள் யாவும் அர்த்தமற்றதாகிப்போய்விடும். நம்மில் தேவன் கிரியை செய்ய காலதாமதம் ஆகிறதென்றால் நமது வாழ்க்கையை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லாவிட்டால் அவலமே மிஞ்சும். யாரும் காப்பாற்ற இயலாது.

கர்த்தாவே நாங்கள் உண்மையுள்ள சாட்சிகளாக இருக்கவே நீர் எங்களிடையில் கிரியை செய்ய விரும்புகின்றீர். ஆனால் நாங்கள் உம்மை எங்கள் வாழ்வில் வெளிபடுத்துவதில் இணக்கம் இல்லாதிருப்பதினால் எங்களிடையிலிருந்து தள்ளி நிற்கிறீர் என்று அறிந்து உம்மோடு இணைந்து வாழ பிராயாசப்படுகின்றோம். உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME