சீஷராக்கி

இயேசு அநேகம் பேரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுத்தார்.

Pharisees had heard that Jesus made and baptized more disciples than John. (John 4:1,2)
Mat28:19;Acts10:44-48;1Cor1:17,18.

யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். (யோவான் 4:1,2)

மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 10:44-48; 1கொரிந்தியர் 1:17,18.

சீஷர்கள்: இச்சொல் புதிய ஏற்பாட்டில் 232 (kjv) தடவைகளுக்குமேல் வருகிறது. இச்சொல் கற்கிறவர், மாணாக்கன், பின்பற்றுகிறவன் என்று பொருளாகின்றது.
ஒருவன் இயேசுவை பின்பற்றுவதில் உறுதிமொழி காண்பிக்கும்போது திருமுழுக்குக்கு தகுதியாகின்றான்.

திருமுழுக்கு பெற்றவன் சீஷராக்கபடுகின்றானா அல்லது சீஷராக்கபட்டவன் திருமுழுக்கு பெறுகின்றானா?

சீஷர்களாக்கபட்டவர் திருமுழுக்கு பெற்று சீஷத்துவத்திலே நிலைத்து நிற்கின்றான். அப்படியென்றால் இயேசுவையும்,இயேசுவின் செய்திகளையும் அறிந்து, தெரிந்து, பின்பற்ற துணிபவனே திருமுழுக்கு பெறுகின்றான்.

திருமுழுக்கு பெற்றவன் மற்றவர்களை சீஷர்களாக்கும் சீஷத்துவ பணிக்கு தன்னை ஒப்படைக்கின்றான்.

இதில் இரு பகுதி உண்டு.
திருமுழுக்கு பெறும்படியான சீஷத்துவம், திருமுழுக்கு கொடுக்கும்படியான சீஷத்துவம்.
யோவான் 4:1,2 திருமுழுக்கு பெறும்படியான சீஷத்துவம் ஆகின்றது.

திருமுழுக்கு பெறுவதற்கான சீஷத்துவ அர்ப்பணம் பின் வருமாறு:
1. இயேசுவை இன்னார் என்று அறிய வேண்டும்.
2. இயேசு எதற்காக வந்தார் என்று அறிய வேண்டும்.
3. இயேசு என்ன செய்தார் என்று அறிய வேண்டும்.
4. இயேசுவை முழுமையாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. இயேசுவை முழுமையாக பின்பற்ற அர்ப்பணிக்க வேண்டும்.

அர்ப்பணமே திருமுழுக்கின் வெளிப்பாடு.
அற்புதங்கள், நற்கிரியைகள் ஒருவரை திருமுழுக்குக்கு நேராகவழி நடத்துகிறதேயன்றி அவைகளே திருமுழுக்குக்கான தகுதிகள் ஆகாது.
திருமுழுக்கின் மையமே இயேசுதான். திருமுழுக்குக்கு முன் சுவிசேஷம் பிரசங்கிக்கபடும்.
திருமுழுக்குக்கு பின்பு பரலோகத்தின் செய்தி பிரசங்கிக்கபடும்.
சுவிசேஷம் பரலோக வாசலில் கொண்டு சேர்க்கும்.
உபதேசம் பரலோகிற்குள் உங்களை வழி நடத்தும்.

கர்த்தாவே, நாங்கள் உம் சுவிசேஷத்தை கேட்டு, விசுவாசித்து திருமுழுக்கு பெற்று அந்த விசுவாச பாதையை தொடர்ந்து கற்று அந்த விசுவாசத்தை பிறருக்கு அறிவிக்க எங்களை அர்ப்பணிக்கின்றோம்.

Comments
  1. அய்யா
    ஞானஸ்நானங்களை வகையாக பிரிக்கலாம். மனதிரும்பலே ஞானஸ்நானத்தின் உட்கரு.
    மாற்கு 1:4
    யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று “மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்” குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
    மத்தேயு 18:3
    நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME