விசுவாசித்ததுண்டா

அதிகாரிகளிலாவது, பரிசேயரிலாவது யாதாமொருவர் அவரை விசுவாசித்ததுண்டா?

Have any of the rulers or the Pharisees believed in Him? (John 7:48)

Jn3:1; Jn7:26,50; Jn12:42; Jn19:39; Mt11:25; Act6:7; Act17:34; 1Cor1:20,22-28; 1Cor2:8.

அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? (யோவான் 7:48) 

யோவான் 3:1; யோவான் 7:26,50; யோவான் 12:42; யோவான் 19:39; மத்தேயு 11:25; அப்போஸ்தலர் 6:7; அப்போஸ்தலர் 17:34; 1கொரிந்தியர் 1:20,22-28; 1கொரிந்தியர் 2:8.

படித்தவர் பிடிக்கப்படவில்லையோ:

நான் இயேசுவால் பிடிக்கப்பட்டவன் என்று பவுல் கூறுகின்றார்.
அனேக மெத்த படித்தவர்கள் விசுவாசத்திற்குள்ளாக வந்துள்ளனர். ஆனாலும்
– அதிகமானவர்கள் மீட்புக்குள் வரவில்லை.
– படித்தவர்கள், மேல்தட்டினர் விசுவாசத்துக்குள் வரவில்லை என்ற குற்றசாட்டு இன்றைக்கும் உள்ளது.

இயேசுகிறிஸ்துவின் மீட்பின் பணியானது யாவருக்குமானதுவே. யாவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
படித்தவர்களோ சுவிசேஷத்தை ஏதாவதொரு முற்கால நிகழ்வுகள், புராணகதைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு இணைத்து இது எனக்கும் தெரியும் என்று கூறி பின்வாங்குகின்றனர்.
படித்தவர்கள் பிற நூல்களோடு சுவிசேஷத்தை ஒப்பிடும் அதேவேளையில் படியாதவர்களோ சுவிசேஷத்தை வாழ்வோடு ஒப்பிடுகின்றனர். இதனால் எளியவர்கள் எளிதாக விசுவாசபாதையில் வருகின்றனர்.

முன் அறிவு உள்ளவன் எவனும் விசுவாசபாதையை தேர்ந்தெடுக்கமாட்டான்.
அப்படியே தேர்ந்தெடுத்தாலும் அதை சாதாரண உலகியல் காரியங்களோடுதான் சம்பந்தப்படுத்தி மேன்மையடைய விரும்புவான்.

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு படித்தவர்கள் நிறைந்துள்ள கிறிஸ்தவம் எதிர்மறையான வாழ்வியல் முறைகளை இணைத்துகொண்டு தள்ளாடுகின்றது. பதவி சண்டைகளும், பதவி ஆசைகளும் , பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மலிந்துக் காணப்படுகின்றன.

உலகபடிப்பு theoretical சார்ந்தது மட்டுமே.
கிறிஸ்தியல் படிப்போ அனுபவம் சார்ந்தது.
விசுவாசபாதை ஆன்மா ஈடேற்றத்துக்கானது,
அறிவு வளர்ச்சிக்கானதல்ல.
நீ விசுவாசித்து முன்னேறு.
பிறனின் அவிசுவாசத்தை பாராதே.

படித்தவன் தன் படிப்பின்மேலும்.
பணக்காரன் தன் பணத்தின்மேலும்.
திறமைசாலி தன் திறமையின்மேலும்
பலசாலி தன்பலத்தின்மேலும் நம்பிக்கை வைக்க. 
எளியவனோ கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கிறான். 

நமக்கு தரப்படும் மேன்மைகள் யாவும் அவர் மேன்மைபடுத்தபடவே. 

கர்த்தாவே ஞானத்தைக் கொடுத்து ஞானியாக்கியும் நன்றி மறந்து உம்குமாரனை மறந்து தங்களையே அதிமேதாவிகளாக காண்பிக்கும் மனிதர்கள் மத்தியில் எங்களை சிறியவர்களாய் நிறுத்தி பெரிய காரியங்களை வசனியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME