வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார்.
Our fathers ate the manna,He gave them bread from heaven to eat. (John 6:31)
Ex16:4-15,35; Num11:6-9; Deu8:3; Jos5:12; Neh9:15,20; Ps78:23-25; Ps105:40; Mt4:4; Mt6:11; Mt16:1; Jn6:49; 1Cor10:3; Rev2:17.
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். (யோவான் 6:31)
யாத்திராகமம் 16:4-15,35; எண்ணாகமம் 11:6-9; உபாகமம் 8:3; யோசுவா 5:12; நெகேமியா 9:15,20; சங்கீதம் 78:23-25; சங்கீதம் 105:40; மத்தேயு 4:4; மத்தேயு 6:11; மத்தேயு 16:1; யோவான் 6:49; 1கொரிந்தியர் 10:3; வெளி 2:17.
வான மன்னா:
எகிப்தில் அடிமைபட்டிருந்த இஸ்ராயேலரை மோசேயின் குடும்பம் மூலமாக மீட்டெடுத்து கானான் தேசத்துக்கு வழிநடத்தினார் கர்த்தர். எளிதாக சென்றடைய வேண்டிய கானானை பாவம் செய்ததினிமித்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக அலைந்தே சென்றடைந்தனர். எளிதாக சென்றிருந்தால் மன்னாவுக்கு அவசியம் இருந்திருக்காது, பாவதண்டனையினிமித்தம் வாக்குதத்தம் நிறைவேற காலதாமதம் ஆனதினால் மன்னாவை தேவன் கொடுத்தார்.
பிரயாணத்தில் கிடைக்கும் உணவை சாப்பிடவேண்டும். ஆனால் அனேக நேரங்களில் உணவும், தண்ணீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பலர் எகிப்துக்கு திரும்பி செல்ல யோசித்தனர். இப்படிபட்ட இக்கட்டான சூழலில் தேவன் இஸ்ராயேலருக்கு உணவையும் தண்ணீரையும் அற்புதமாக கொடுத்தார்.
இந்த மன்னாவின் இரகசியம்.
1. இது வானத்திலிருந்து கொடுக்கப்பட்ட பரலோக உணவு.
2. இது தூதர்களின் உணவாகிய பரலோக உணவு.
3. இது அற்புதமான உணவு.
4. இது இஸ்ராயேலரை சோதித்துபார்க்கும்படி கொடுக்கப்பட்ட உணவு.
5. இது கட்டளைகளை கீழ்படிய தூண்டும் உணவு.
6. இது ஈகையின் உணவு. இனாமாக தரப்பட்ட உணவு.
7. இது நிரந்தரமான உணவல்ல, பிரயாண கால உணவு மட்டுமே.
பிதா தம்மால் வழிநடத்தபட்ட ஜனங்களுக்கு வானத்திலிருந்து மன்னாவை உணவாக தந்தார். இயேசுகிறிஸ்துவால் மீட்கப்பட்டு பரமகானான் நோக்கி பிரயாணப்படுகிற நமக்கும் தேவன் புதிய மன்னாவை தந்துள்ளார். அதுதான் வானத்திலிருந்து, தேவனிடமிருந்து, கிறிஸ்துவின் வழியாக, பரிசுத்த ஆவியினவர் நம்மில், நம்க்குள் கொடுத்த வார்த்தை என்ற உணவு. பூமிக்குரிய உணவு 100 வருட வாழ்வுக்கு கொண்டுபோகும். பரலோகிற்குரிய உணவு உன்னை பரலோகம் கொண்டுபோகும்.
நீ அவிக்குரிய பருமன், ஆவிக்குரிய பலம், ஆவிக்குரிய ஞானம் அடைய இந்த வசன உணவு உனக்கு மிகவும் அவசியம். இதை உண்டு வாழ்கிறவனை இங்கேயும் பிழைக்க வைக்கும், அங்கேயும் பிழைக்க வைக்கும்.
கர்த்தாவே நீர் உம் ஜனத்தை வான மன்னாவால் போஷித்து கானான் சேர்த்ததுபோல உமது மகன் மூலம் மீட்கபட்ட எங்களையும் உமது வான மன்னாவாகிய வசனத்தினால் போஷித்து பரம கானானை அடைய எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் உலக உணவிலே பெலம் கொண்டு அதையே நாடி தேடாமல், உம்மையும் உம் வசனத்தையும், உம் குமாரனையும், அவர் வசனத்தையும் நாடி தேட பெலம் தாரும்.