கடைசி வரை நம்முடன் இருப்பவர்

கடைசி வரை நம்முடன் இருப்பவர்…

வீடு வரை உறவு! வீதி வரை மனைவி! காடு வரை பிள்ளை! கடைசி வரை யாரோ!?

கடைசி வரை ஒருவர் இருக்கிறார்! உலகம் முடிவு வரை இருக்கிறார்!! உலகம் முடிவுற்ற பின்னும் இருக்கிறார்!

நமது உள்ளார்ந்த மனிதனை (ஆத்மா) மரணத்தினின்று விடுவிக்க அவர் நம்மைப் போல் மனிதனாய் வந்தார்!

நமது உள்ளார்ந்த மனிதனை (ஆத்மா) மரணத்தினின்று விடுவிக்க இயலாத நம்மை,விடுவிக்க மனிதனாய் வந்து, நமக்காகத் தனது மாம்சீக மரணத்தை திட்டமும் தெளிவுமாய் நிறைவேற்றி, உயிர்த்தெழுந்து, சகல அதிகாரத்தையும் பெற்றவராய் விளங்குகிறார்! நமது உள்ளார்ந்த மனிதனை (ஆத்மா) மரணத்தினின்று விடுவித்தவர்.

நமது உள்ளார்ந்த மனிதன் (ஆத்மா) மரித்து விடாதபடி நம்மை அனுதினமும் அவரது ஆவி மூலம் எச்சரித்து, உணர்த்தி பாதுகாத்து வருகிறார்.

சகல அதிகாரத்தையும் பெற்றிருக்கிற அவர் நமது மாம்ச மரணத்தையும் தமது மாம்ச மரணத்தினாலும் உயிர்த்தெழுந்ததினாலும் ஜெயித்திருக்கிறார்.

நமது உள்ளார்ந்த மனிதன் (ஆத்மா) நமது மாம்ச மரணத்தினாலே அவர் ஆயத்தம் செய்து வைத்திருக்கிற இளைப்பாறுதலிலே எவ்வித பசியால், கவலையோ உபத்திரவமோ இல்லாமல், நிறைவான மகிழ்ச்சியோடு இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் ஒரு நாள் வருவார்! என்றென்றும், உலகம் முடிவுற்ற பின்னும், பேரானந்தத்தோடு, நாம் அவரோடு இருக்கும்படி அழைத்துக் கொண்டு போவார்! அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து! ஆமென்

ADD YOUR COMMENT

Powered By Indic IME