புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா, ஒன்றுமில்லை என்றார்கள்.

Jesus said,Children, have you any food? They answered Him,No. (John 21:5) 

Luke 24:36-44; Philippians 4:11-13,19; Hebrews 13:5; Psalms 37:3; Proverbs 23:15; Proverbs 30:7-9. 

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். (யோவான் 21:5)

லூக்கா 24:36-44; பிலி4:11-13,19; எபிரெயர் 13:5; சங்கீதம் 37:3; நீதிமொழிகள் 23:15; நீதிமொழிகள் 30:7-9. 

உன்னிடம் ஏதாவது உண்டா?
தேவனை கொடுக்கிறவராகவும், மனிதனை வாங்குகிறவராகவும் பாவிக்கப்பட்ட இவ்வுலகில் கொடுக்கிறவரே வாங்குகிறவனிடத்தில் கொடுக்கும்படி கேட்கின்றார். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் எத்தகைய மனநிலையில் இவ்வாறு கேட்டார் என்று நாம் அறிய முடியாவிட்டாலும், மீன்பிடிக்கின்ற சீஷர்கள் மீன்களை பிடிக்க முடிந்ததா என்பதை அறியும்படியாகவே கேட்டிருக்க்கூடும். கொடுக்கும்படி கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கும்படியாகவோ, புசிக்கும்படியாகவோ தங்களிடம் எதுவும் இல்லை என்பதே பதிலாய் இருந்தது. 

தேவனுடைய கட்டளையை பெற்றுக்கொண்ட சீஷர்கள் தேவனுடைய அனுமதியில்லாமல் செய்கின்ற எதுவும் வெற்றியாய் முடியாது. வருத்தத்தையும், வேதனையையும், இழப்பையும், ஏமாற்றத்தையும் அனுபவிக்க வேண்டி வரும். உழைக்கிறவர்கள் உண்பதற்கும், சேர்ப்பதற்கும் மட்டுமல்ல கொடுப்பதற்கும் கட்டளை பெற்றுள்ளார்கள். சீஷர்களால் உண்ணவும் முடியவில்லை, சேர்க்கவும் முடியவில்லை, கொடுக்கவும் முடியவில்லை. இதுபோலொத்த நிலைமைக்குள் நாம் காணப்படுவோமெனில் இத்தியாதி நிலையினின்று வெளியே வருவோமாக. 

இயேசு கீறிஸ்து சீஷர்களிடம் இன்று உணவு கேட்டார். அன்று குடிக்க தண்ணீர் கேட்டார். அத்திமரத்திடம் பழம் கேட்டார். எங்கும் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்கவும் இடம் கிடைக்கவில்லை. உயிர்த்தெழுதலுக்கு முன்பிருந்த அதே நிலைமைதான் உயிர்த்தெழுந்த பின்பும் நடந்தேறுகின்றது. ஆம் இயேசுவுக்கு உணவு கொடுக்க கடமை பட்டுள்ளோம். நாம் அவருக்கு கீழ்படிந்து அவருக்கு பிரியமானதை அவரது சித்தபடி செய்வதே அவருக்கு நாம் கொடுக்கும் உன்னத உணவு. 

வயதான பெற்றோருக்கு அன்ன வஸ்திரம் கொடுத்து தாங்குவதும், நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு ஒத்தாசையாய் நிற்பதும், ஊழியம் செய்கிற சொந்த ஊழியர்களுக்கு அன்ன வஸ்திரம் கொடுத்து ஆதரிப்பதும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் கடமையாகும். பெரியவர்கள் இளையவர்களிடம் கையேந்தி நிற்கும்படி இடம் கொடுக்காமல் இளையவர்கள் பெரியவர்களின் தேவையை அறிந்து முன்னதாகவே கொடுத்துதவுவதுதான் உன்னத நற்கிரியையாகும். பெற்றோரும் ஊழியகாரர்களும் நம் தேவை அறிந்து நமக்கு உதவியவர்கள். நாம் அவர்களைபோலவே நடந்துக் கொண்டால் சகலமும் பரிபூரணமாகக் காணப்படும். 

எளியவர்களுக்காய் குரல் கொடுக்கும் தேவனுடைய மனிதர்கள் எந்த அளவிற்கு தங்கள் பெற்றோரை பராமரிக்கிறவர்களாகவும், தங்களை ஆவிக்குரிய வழியில் வழிநடத்திய ஊழியரை தாங்குகிறவர்களாகவும், தங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களை நினைவுகூருகிறவர்களாகவும் இருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தால் நலமாயிருக்கும். 

நாம் எந்த அளவினால் அளக்கிறோமோ அந்த அளவினாலே அளக்கப்படும். 

வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.  எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். அப்போஸ்தலர் 2:39-47.

ADD YOUR COMMENT

Powered By Indic IME