சிலுவை கூறும் செய்தி என்ன?
சிலுவைக் குறித்து புதிய ஏற்பாடு மட்டுமே கூறுகின்றது.
பு.ஏ ல் மத்தேயு 10:38 லிருந்து வெளி 11:8 வரையிலும் ஏறக்குறைய 16 புத்தகங்களில் சிலுவைக் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றது.
சிலுவை தேவனால் வாக்களிக்கப்பட்ட ஒன்று. இதற்கான நேரடி குறிப்புகள் இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் செய்திகளில் இக்கருத்து காணப்படுகின்றது.
சிலுவையில் தான் மரிக்க போகின்றேன் என்று இயேசு கூறினார். மத்தேயு 20:19.
தம்மை பின்பற்றுகிறவர்கள் சிலுவையை சுமந்து வரவேண்டும் என்றார் இயேசு. மத்தேயு 10:38.
இயேசுவுக்கு பின்பு அவரை பின்பற்றுகிறவர்கள் சிலுவையில் அறையப்படுவர் என்றார் இயேசு. மத்தேயு 23:34.
இயேசு தமது சிலுவையை தாமே சுமந்து சென்றார். யோவா19:17.
ஆதி அப்போஸ்தலர்கள் இந்த சிலுவையை குறித்து பிரசங்கித்தார்கள். அப் 2:36;4:10.
ஆதி சபை சிலுவையை குறித்து பேசியது. 1கொரி 1:18.
ஆதி சபை உபதேசமானது சிலுவையையும், இயேசுவையும், உபதேசத்தையும் பிரித்து பார்க்காததினால் ஆதிசபையானது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை என்றும், சிலுவையின் உபதேசம் என்றும் கூறியது. 1கொரி 22;1:18.
இயேசுகிறிஸ்துவின் சிலுவைபாடுகளை ஆதிசபை புரிந்து கொண்டதை கவனிக்கலாம்.
நமது பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டான். ரோமர் 6:6.
மகிமையின் கர்த்தரே சிலுவையில் அறையப்பட்டார். 1கொரி 2:8.
அவர் பலவீனத்தினால் சிலுவையில் அறையப்படவில்லை. 2கொரி13:4.
பகையை சிலுவையில் கொன்றார். எபே 2:16.
சிலுவை மூலம் கீழ்படிதலை வெளிப்படுத்தினார். பிலி 2:8.
சிலுவையின் வழி சமாதானம். கொலோ 1:20.
பாவங்களை சிலுவையில் சுமந்தார். 1பேது 2:24.
சிலுவையில் அறையப்பட்டவரே ஆண்டவரும் கிறிஸ்துவுமானார். அப் 2:36.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் நாமத்தினாலே சுகம். அப் 4:10.
கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டவர்களே தேவ பிள்ளைகள். கலா 2:20.
சிலுவையில் அறையப்பட்டவராக வெளிபடுத்தபட்டுள்ளார். கலா3:1.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்துள்ளனர். கலா5:24.
சிலுவையை குறித்து மேன்மை பாராட்டுவதே கிறிஸ்தவ மாண்பு. கலா6:14.
உலகம் சிலுவையில் அறையபட்டுள்ளது. கலா5:24.
இவ்விதமாய் சிலுவையே கிறிஸ்தவ உபதேசங்களின் மையபொருளாக அமைந்துள்ளது. சிலுவையோடு அவமானம், மரணம், உயிர்ப்பு, புது வாழ்வு இணைந்துள்ளது.
இயேசு மீட்புக்காக இரத்தம் சிந்தினார்.
பாவத்தை சாகடிக்க மரித்தார்.
மனிதர்க்கு மரணம் உண்டு என்று காண்பிக்கின்றார்.
மரணத்தை ஜெயிக்க முடியும் என்பதே உயிர்ப்பு.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:14-18/